சுற்றுலாப்பயணிகள் கண் முன்னே கடலில் நீந்திக்கொண்டிருந்தவரை கடித்து விழுங்கிய சுறா
அவுஸ்திரேலிய கடற்கரை ஒன்றில் சுற்றுலாப்பயணிகள் உட்பட ஏராளம் பேர் கூடியிருக்க, அவர்கள் கண் முன்னே கடலில் நீந்திக்கொண்டிருந்த ஒருவரை சுறா மீன் ஒன்று கடித்துத் துண்டாக்கி விழுங்கிய பயங்கர சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
இன்று உள்ளூர் நேரப்படி 4.30 மணியளவில், சிட்னி கடற்கரையில் ஏராளமானோர் கூடியிருந்தனர்.
அப்போது, கடலில் நீந்திக்கொண்டிருந்த ஒருவரை நான்கரை மீற்றர் நீளமுடைய great white shark வகையைச் சேர்ந்த சுறா மீன் ஒன்று தாக்கியது.
அவர் மரண ஓலம் எழுப்ப, பார்த்துக்கொண்டிருந்தவர்கள் ஒன்றும் செய்ய இயலாமல் தவிக்க, அவர்கள் கண் முன்னேயே அவரை இரண்டு துண்டுகளாக்கிய சுறா, அவரது உடலின் ஒரு துண்டை கடலுக்கடியில் இழுத்துச் சென்றது.
சில விநாடிகளில் மீண்டும் திரும்பிய சுறா, அவரது மீதமுள்ள உடலையும் கடலுக்குள் இழுத்துச் சென்றதை கடற்கரையில் கூடியிருந்த மக்களும், மீனவர்களும் திகிலுடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
தகவலறிந்து வந்த உதவிக்குழுவினருக்கு, அவரது உடலில் சில பாகங்களும், உடையின் சில துண்டுகளும் மட்டுமே கிடைத்தது.
அதிர்ச்சியில் உறைந்திருந்த மக்களை கடற்கரையிலிருந்து வெளியேற்றிய அதிகாரிகள், கடற்கரைக்கு மக்கள் செல்ல தடைவிதித்தனர்.
அதிகம் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்லும் சிட்னி கடற்கரையில் நிகழ்ந்த இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது தொடர்பாக அதிகாரிகள் விசராணை ஒன்றைத் துவக்கியுள்ளனர்.
சிட்னி கடற்கரையில், இதுபோல் சுறா ஒன்று கடலில் நீந்திய ஒருவரைத் தாக்கிய சம்பவம் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பின் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
]