கொரோனா பரவல் ஒருபக்கம்.... பிரித்தானியாவை உலுக்கும் அடுத்த கொடிய பாதிப்பு: முழு தகவல்
கொரோனா ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளால் பிரித்தானிய மக்கள் தவித்து வரும் நிலையில் இங்கிலாந்தின் தென்மேற்கு பகுதியில் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்வலைகளை கிளப்பிய்யுள்ளது.
பாதிக்கப்பட்ட நபர் தொடர்பில் முழுமையான தகவல்களை சுகாதாரத்துறை வெளியிடவில்லை. இருப்பினும், பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட உயிரினங்களுடன் அந்த நபர் தொடர்பில் இருந்ததாகவும், அவரது குடியிருப்புக்கு அருகாமையிலும் பாதிக்கப்பட்ட பறவைகள் காணப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
தற்போது அவர் சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாகவும், அச்சப்படும் வகையில் அவரது உடல் நிலை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பறவைக் காய்ச்சல் மனிதரிடம் இருந்து மனிதருக்குப் பரவுவது என்பது அரிதானதாகவே பார்க்கப்படுகிறது. இதனால் மனிதர்களுக்கு அச்ச்சுறுத்தல் என்பது மிக் மிக குறைவு, இருப்பினும் பாதிக்கப்பட்ட பறவைகளை மக்கள் நேரிடையாக தொடுவது தவிர்க்கப்பட வேண்டும் என சுகாதாரத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
[
தற்போது பாதிக்கப்பட்டுள்ள நபருக்கு H5N1 தொற்று உறுதி செய்யப்பட்டால் இங்கிலாந்தில் பறவைக் காய்ச்சலுக்கு ஒருவர் பாதிக்கப்படும் முதல் நிகழ்வாக இது இருக்கும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தற்போதைய பறவைக் காய்ச்சல் பரவல் என்பது பிரித்தானியாவில் இதுவரை பதிவாகியதில் மிகப்பெரியது என கூறப்படுகிறது. மேலும், இதுவரை அரை மில்லியன் எண்ணிக்கையிலான பறவைகள் கொல்லப்பட்டுள்ளன..
உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, அக்டோபர் 2021 நிலவரப்படி, 2003 முதல் உலகளவில் மனிதர்களில் 863 பேர்களுக்கு H5N1 பாதிப்பு பதிவாகியுள்ளன. இதில் 456 பேர்களின் நிலை கவலைக்கிடமாக மாறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021ல் ஒரே ஒருவருக்கு மட்டும் H5N1 பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதுவும் இந்தியாவில், அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.