இந்தியாவால் ரிஷி சுனக் மற்றும் உள்விவகார செயலாளர் இடையே மோதல் வெடிக்கலாம்: வெளிவரும் முக்கிய பின்னணி
வணிக விசாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பிரித்தானிய அரசு இந்தியாவுடன் பேச்சுவார்த்தை
பில்லியன் கணக்கான நுகர்வோரை மிக எளிதாக ஏற்றுமதியாளர்களுக்கு அணுக வாய்ப்பாக அமையும்
இந்தியா மற்றும் பிரித்தானியா இடையே முன்னெடுக்கப்படவிருக்கும் வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக வழங்கப்படும் வணிக விசா எண்ணிக்கை தொடர்பில் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் உள்விவகார செயலாளர் சுயெல்லா பிரேவர்மேன் இடையே மோதல் வெடிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் வணிக விசாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமா என்பது குறித்து பிரித்தானிய அரசு இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
Image: UK Parliament/Jessica Taylor
ஆனால் இந்த விவகாரமே தற்போது ரிஷி சுனக் மற்றும் சுயெல்லா இடையே மோதலை உருவாக்கலாம் என கூறுகின்றனர். வர்த்தக அமைச்சர் கிரெக் ஹேண்ட்ஸ் புதன்கிழமை ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் தெரிவிக்கையில் ஒப்பந்தத்தின் பெரும்பகுதி குறித்து பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பின்னர், வர்த்தகம் தொடர்பில் புதிய வாய்ப்புகளை தீவிரமாக தேடி வருகிறது பிரித்தானியா. தற்போது இந்தியாவுடன் அப்படியான ஒரு வாய்ப்பு அமையவிருக்கிறது.
இது தொடர் பிரித்தானிய வர்த்தக அமைச்சர் கிரெக் ஹேண்ட்ஸ் தெரிவிக்கையில், இந்தியாவுடனான ஒப்பந்தமானது பில்லியன் கணக்கான நுகர்வோரை மிக எளிதாக ஏற்றுமதியாளர்களுக்கு அணுக வாய்ப்பாக அமையும் என்றார்.
ஆனால் பிரித்தானியாவின் கொள்களை மீறி விசா தொடர்பான ஒப்பந்தங்கள் முன்னெடுக்கப்பட்டால் அமைச்சரவையில் புதிய சிக்கலை அது ஏற்படுத்தும். ஏற்கனவே புலம்பெயர்வோர் தொடர்பில் கடுமையான போக்கு கொண்ட சுயெல்லா, இந்தியாவுடனான வணி விசா ஏற்பாடுகளில் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.
நாட்டில் உள்ள புலம்பெயர்ந்த மக்களில் பெரும்பாலானவர்கள் விசா காலம் முடிந்தும் பிரித்தானியாவில் தங்கியுள்ள இந்திய புலம்பெயர்ந்தோர் என்றே சுயெல்லா ஒருமுறை குறிப்பிட்டுருந்தார்.
மேலும், இந்தியாவுடன் முழுமையான ஒரு குடியேற்றக் கொள்களைக் கொண்டிருப்பதில் தமக்கு உடன்பாடில்லை எனவும். இப்படியான சூழலுக்காக அல்ல பிரித்தானிய மக்கள் பிரெக்ஸிட் ஆதரவாக வாக்களித்தார்கள் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
@AP
சுயெல்லாவின் இந்த கருத்து அப்போதைய பிரதமர் லிஸ் ட்ரஸை எரிச்சல் கொள்ள வைத்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இது தொடர்பில் வர்த்தக அமைச்சர் கிரெக் ஹேண்ட்ஸ் குறிப்பிடுகையில், இவை ஒன்றும் குடியேற்ற விசாவுக்கான ஏற்பாடுகள் அல்ல. இவை அனைத்தும் வணிக விசாக்கள் தொடர்பானவை மாறாக நிரந்தர குடியேற்றத்திற்கான ஒப்பந்தம் அல்ல என குறிப்பிட்டுள்ளார்.