நியூஸிலாந்திற்கு பயத்தை காட்டிய வங்காளதேச பந்துவீச்சாளர்கள்: முதல் அரைசதமடித்த வீரர்
வங்காளதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், நியூஸிலாந்தின் டீன் ஃபோக்ஸ்கிராப்ட் முதல் அரைசதம் அடித்தார்.
ஹென்றி நிக்கோலஸ் அரைசதம்
நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் ஒருநாள் மற்றும் டி20 போட்டித் தொடர்களில் விளையாடுகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் நடந்து வருகிறது. முதலில் துடுப்பாடிய நியூஸிலாந்து அணியில் நிக் கெல்லி 7 ஓட்டங்களில் வெளியேற, வில் யங் நிதானமாக ஆடி 42 பந்துகளில் 30 ஓட்டங்கள் எடுத்தார்.
அடுத்து வந்த அணித்தலைவர் டாம் லாதம் 14 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அரைசதம் அடித்த ஹென்றி நிக்கோலஸ் 83 பந்துகளில் (9 பவுண்டரிகள்) 68 ஓட்டங்கள் விளாசினார்.

டீன் ஃபோக்ஸ்கிராப்ட் 59 ஓட்டங்கள்
அப்பாஸ் 14 ஓட்டங்கள் அவுட் ஆகி சொதப்ப, டீன் ஃபோக்ஸ்கிராப்ட் (Dean Foxcroft) அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 59 ஓட்டங்கள் குவித்தார். இது அவரது முதல் அரைசதம் ஆகும்.

வங்காளதேச வீரர்கள் துல்லியமாக பந்துவீசியதால், நியூஸிலாந்து அணியால் 250 ஓட்டங்கள் கூட எட்டமுடியவில்லை. நாதன் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 21 ஓட்டங்கள் எடுக்க, நியூஸிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 247 ஓட்டங்கள் எடுத்தது.
தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், ரிஷாத் ஹொசைன் தலா 2 விக்கெட்டுகளும், மெஹிதி மற்றும் நாஹித் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |