பிரித்தானியாவில் கொலை செய்யப்பட்ட 5 வயது சிறுவன்: 35 வயது பெண்மணி கைது
பிரித்தானியாவின் எசெக்ஸில் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
5 வயது சிறுவன் மரணம்
பிரித்தானியாவின் எசெக்ஸின்(Essex) தெற்கு ஒக்கெண்டன்(South Ockendon) பகுதியில் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் 35 வயதுடைய பெண் ஒருவர் கொலை குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
டிசம்பர் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை விண்ட்ஸ்டார் டிரைவ்-ல்(Windstar Drive) உள்ள வீட்டில் நடந்த சம்பவத்தில் லிங்கன் பட்டன்(Lincoln Button) உயிரிழந்துள்ளார்.
குழந்தை தொடர்பான தீவிர சம்பவம் குறித்து அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
மருத்துவ சேவைகளின் தீவிர முயற்சிகளுக்கு பிறகும் 5 வயது சிறுவன் லிங்கன் பட்டன் உயிர் பிழைக்கவில்லை.
மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
35 வயது பெண் கைது
அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்த நிலையில், அவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து விண்ட்ஸ்டார் டிரைவ்-வை சேர்ந்த 35 வயது பெண் கிளேர் பட்டன் கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |