புனித் ராஜ்குமார் இறப்பை அவரின் அத்தையிடம் மறைத்த குடும்பம்! காரணம் இதுதான்
கன்னட பவர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட புனித் ராஜ்குமார் அக்டோபர் 29 ,2021 இயற்கை எய்தினார்.
இவரின் இழப்பு அவரது திரையுலகினரை மற்றுமின்றி ரசிகர்களையும் பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
புனித் ராஜ்குமார் மறைந்து ஐந்து மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் புனித் ராஜ்குமாரின் மறைவினை அவரின் அத்தை, நாகம்மாவிடமிருந்து அவரின் குடும்பம் மறைத்து வருகின்றனர் என்ற தகவல் கிடைத்துள்ளது.
நாகம்மா புனித் ராஜ்குமாரின் தந்தை ராஜ்குமாரின் சகோதரி ஆவார். இவர் இளமை பருவத்தில் இருந்தே புனித் ராஜ்குமாரை அக்கறையுடன் பார்த்து வந்துள்ளனர்.
ஆனால் அவரின் அத்தையிடம் புனித் ராஜ்குமார் இறந்த செய்தியை கூறாமல் ரகசியமாக மறைத்து வருகின்றனர்.
இதனால் நாகம்மாவின் வீட்டிலுள்ள புனித் ராஜ்குமாரின் உருவபடத்திற்கு மாலை அணிவிக்காமல் இருகின்றனர். குடும்ப நபர்கள் எவரேனும் நாகம்மாவை சந்திக்க சென்றால் அவர்களிடம் புனித்தை பற்றிப் பேச வேண்டாம் என்று கூறிவார்களாம்.
இந்நிலையில் இதுகுறித்து புனித் ராஜ்குமாரின் குடும்ப நபர் கூறுவதாவது ,
நாகம்மா, புனித்தின் நினைவு வரும் போதெல்லாம் , அவரைப் பற்றி கேட்பார். அவர் படபிடிப்பிற்க்காக வெளிநாடு சென்றுள்ளார் என்று கூறிவிடுவோம்.
சில வருடங்களுக்கு முன்பு ராகவேந்திர ராஜ்குமார் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்ட செய்தியை நாகம்மாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்பு இறந்த செய்தியை நாகம்மாவால் பொறுத்து கொள்ள முடியாது. ஆகவே நாங்கள் அப்புவின் மறைவு செய்தியை ரகசியமாக மறைத்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.