சுவிட்சர்லாந்தில் கொரோனாவின் இரண்டாவது அலையின்போது பக்கத்து நாடுகளைவிட அதிக உயிர் பலி: ஆய்வு முடிவுகள் 3 hours ago
சுவிட்சர்லாந்தில் கொரோனாவின் இரண்டாவது அலை முதல் அலையை விட அதிக உயிர் பலி வாங்கியதாகவும், இரண்டாவது அலையின்போது நாடு அதை எதிர்கொண்ட விதம், பக்கத்து நாடுகளைவிட மோசமானதாக இருந்ததாகவும் ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகமும் NZZ என்ற பத்திரிகையும் இணைந்து மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், கடந்த ஆண்டு மார்ச் முதல் மே வரையிலான காலகட்டத்தில் உயிரிழந்தவர்கள் 19 சதவிகிதம் பேர்தான் என்றும், அதே நேரத்தில் இரண்டாவது கொரோனா அலையின்போது, அதாவது, கடந்த ஆண்டு நவம்பரிலிருந்து உயிரிழந்தவர்கள் 77 சதவிகிதம் பேர் என்றும் தெரியவந்துள்ளது.
பல நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை, முதல் அலையைவிட மோசமானதாக இருந்தது உறுதிசெய்யப்பட்டிருந்தாலும், சுவிட்சர்லாந்தில் நவம்பருக்கும் ஜனவரிக்கும் இடையில், அதன் பக்கத்து நாடுகளைவிட விட அதிக அளவில் உயிர் பலி இருந்துள்ளது தெரியவந்துள்ளது.
அதே நேரத்தில் ஒரு நல்ல செய்தி என்னவென்றால், இந்த எண்ணிக்கை, இரண்டாவது அலை முடிவுக்கு வருவதையும் காட்டுகிறது என்பதுதான்.