மரண தண்டனை நிறைவேற்றும்போது வலியால் துடித்த கைதி
A death row inmate screamed that his lethal injection was not working: அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றும்போது கைதி ஒருவர் வலியால் துடித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் அமெரிக்காவில் கிறிஸ்டா பைக் என்னும் பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றும்போது அவர் உயிர் பிழைத்துக்கொண்டது நினைவிருக்கலாம்.

இந்நிலையில், கிறிஸ்டாவுக்கு செலுத்தப்பட்ட அதே ஊசி மருந்து மூலம் மற்றொரு கைதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
வலியால் துடித்த கைதி
ரெய்னால்டோ டென்னெஸ் (Reinaldo Dennes, 70) என்பவர் 29 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

1996ஆம் ஆண்டு, நகை வியாபாரியாகிய Janos Szucs என்பவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதற்காக டென்னெஸுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
நேற்று அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில், கிறிஸ்டாவுக்கு செலுத்தப்பட்ட அதே மருந்தை ஊசி மூலம் டென்னெஸுக்கு செலுத்த முயன்றுள்ளார்கள் அதிகாரிகள்.
ஆனால், அவர்களால் அவரது உடலில் ஊசியை நுழைக்க முடியவில்லையாம். பல முறை முயன்று பிறகு ஊசி மூலம் மருந்தை ஏற்ற, வலி தாங்க முடியாமல் கதறியுள்ளார் டென்னெஸ்.
சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பின்பே அவர் உயிரிழந்ததாக தி சன் ஊடகம் தெரிவிக்கிறது.
அவர், கால் வலிக்கிறது, மருந்து வேலை செய்யவில்லை என்றெல்லாம் சத்தமிட்டுள்ளார்.
ஆனால், அவர் போலியாக வலி என கூறியிருக்கலாம், அல்லது லேசான வலியை பெரிதுபடுத்தியிருக்கலாம் என சிறையின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.
மரண தண்டனையின்போது உயிர் பிழைத்த கிறிஸ்டாவும், தனக்கு உடலும் மனதும் வலிப்பதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.