இரண்டு பிரபல நடிகர்கள் மரணம் குறித்து இணையத்தில் பரவிவரும் வதந்திகள்
இரண்டு பிரபல நடிகர்கள் மரணமடைந்துவிட்டதாக இணையத்தில் பரவிவரும் செய்திகள், அவர்களுடைய ரசிகர்களை வருத்தமடையச் செய்துள்ளன.
ஜாக்கி சான்
உலக அளவில் சீனாவைச் சேர்ந்த ஒரு நடிகர் இந்த அளவுக்கு பிரபலமாக இருப்பாரென்றால், அது ஜாக்கி சானைத் தவிர வேறு யாருமாக இருக்கமுடியாது.
அவரது நகைச்சுவை கலந்த திரைப்படங்கள் நாடு, மொழி, ஆண், பெண் பேதமில்லாமல் அனைவராலும் ரசிக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில், ஜாக்கி பல ஆண்டுகளாக ஸ்டண்ட் காட்சிகளில் பங்கேற்றதால் ஏற்பட்ட காயங்கள் காரணமாக தனது 71ஆவது வயதில் மரணமடைந்துவிட்டதாக இணையத்தில் வதந்திகள் பரவிவருகின்றன.
Facebook’s latest fake news: Jackie Chan has passed.
— Digital Gal 🌸 (@DigitalGal_X) November 10, 2025
He hasn’t. pic.twitter.com/fxBdLGuRCf
ஆனால், அவர் நலமுடன் இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளதுடன், சமூக ஊடகங்களில் வெளியாகிவரும் புகைப்படங்கள் AI உதவியுடன் உருவாக்கப்பட்டவை என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தர்மேந்திரா

பிரபல இந்திய நடிகரான அமிதாப் பச்சனுடைய சக காலத்தவரான தர்மேந்திரா என்னும் இந்திய நடிகர் தனது 89ஆவது வயதில் மரணமடைந்துவிட்டதாக வெளியான வதந்திகள், அவரது குடும்பத்தினரை வருத்தத்துக்குள்ளாக்கியுள்ளன.
தர்மேந்திராவின் மனைவியும் பிரபல நடிகையுமான ஹேமமாலினி வெளியிட்டுள்ள செய்தியில், தர்மேந்திரா மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளதுடன், அவர் விரைவில் நலம் பெற பிரார்த்தனை செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
