பிரபல இந்திய நடிகருக்கு பிரித்தானியாவிலிருந்து கொலை மிரட்டல்: பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தகவல்
பிரபல இந்திய நடிகர் ஒருவருக்கு பிரித்தானியாவிலிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல நடிகருக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்
பிரபல இந்திய நடிகரான சல்மான் கானுக்கு, பிரித்தானியாவிலிருந்து மின்னஞ்சல் வாயிலாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அந்த மின்னஞ்சல் Sidhu Moose Wala என்னும் பஞ்சாபி பாடகரைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள கேங்ஸ்டரான Goldy Brar பெயரில் அனுப்பப்ப்பட்டுள்ளதால் மேலும் பரபரப்பு தொற்றிக்கொள்ள, அந்த மிரட்டல் செய்தியை அனுப்பியது யார் என்பதைக் கண்டறியும் முயற்சியில் பொலிசார் இறங்கினர்.
அப்போது, அந்த மின்னஞ்சலை அனுப்பியது ஹரியானாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் என தெரியவந்தது. அந்த மாணவர் பிரித்தானியாவில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் படிப்பதாக கூறப்படுகிறது.
#SalmanKhan death threat: Indian student in UK faces look out circular for sending threatening email https://t.co/QSs5CsSUd5
— The Times Of India (@timesofindia) May 9, 2023
நாடுகடத்தும் நடவடிக்கை துவக்கம்
அந்த மாணவர் தொடர்பில் இந்திய பொலிசார் lookout circular ஒன்றை வெளியிட்டுள்ளனர். அவரை இந்தியாவுக்கு நாடுகடத்தும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன.
பிரித்தானியாவுடன் இந்தியா செய்துகொண்டுள்ள Mutual Legal Assistance treaty (MLAT) என்னும் ஒப்பந்தத்தின் கீழ், அந்த மாணவரை இந்தியாவுக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகளை பொலிசார் துவக்கியுள்ளனர்.