சுவிஸ் பெண் அரசியல்வாதிக்கு கொலை மிரட்டல்: பின்னணியில் எலான் மஸ்க் தள விமர்சனம்
சுவிஸ் பெண் அரசியல்வாதி ஒருவர், தான் எலான் மஸ்கின் எக்ஸ் தளத்தை விமர்சித்ததால் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுவருவதாக தெரிவித்துள்ள விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
எக்ஸ் தளம் குறித்து விமர்சனம்
சுவிட்சர்லாந்தின் கீழவையில் நாடாளுமன்ற உறுப்பினரான இருப்பவர் மீரெட் ஸ்னைடர் (Meret Schneider).
ஜேர்மன் அரசியலில் எக்ஸ் தளம் முதலான சமூக ஊடகங்களின் தலையீடு குறித்து பேசிய ஸ்னைடர், டிக்டாக், எக்ஸ், ஃபேஸ்புக் போன்ற தளங்கள் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதை ஜேர்மன் தேர்தல் பிரச்சாரம் காட்டுவதாக தெரிவித்துள்ளார்.
அவை புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சிகளின் இடுகைகளை முன்னிலைப்படுத்துகின்றன, அவற்றை எதிர்க்கும் கருத்துக்களோ பின்தள்ளப்படுகின்றன.
இன்று ஜேர்மனியை அவை பாதிக்கின்றன, சில ஆண்டுகளில் அவை சுவிட்சர்லாந்தின் தேர்தல்களையும் பாதிக்கலாம் என்று கூறியுள்ள ஸ்னைடர், இத்தகைய சமூக ஊடகங்கள் கடுமையாக கட்டுப்படுத்தப்படவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதைத் தொடர்ந்து, ஸ்னைடருக்கு கொலை மிரட்டல்கள் வரத்துவங்கியுள்ளன.
தொலைபேசியில் யார் யாரோ அழைத்து மிரட்டுவதாகத் தெரிவித்துள்ள ஸ்னைடர், ஞாயிற்றுக்கிழமை மாலை ஆண் ஒருவர் தன்னை அழைத்து, பார்த்துக்கொண்டே இரு, உன்னைக் கொன்றுவிடுவோம் என மிரட்டியதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்கர்கள், எலான் மஸ்குடன் தொடர்பு படுத்தி சமூக ஊடகங்களில் எதிர்மறையான செய்திகளை வெளியிட்டுவருவதாகவும் தெரிவித்துள்ளார் ஸ்னைடர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |