கனேடிய கிரிப்டோகரன்சி நிறுவன தலைவர் இந்தியாவுக்கு சென்று தலைமறைவானதாக குற்றச்சாட்டு: மனைவிக்கு வந்த கொலை மிரட்டல்கள்
கனடாவில், கிரிப்டோகரன்சி பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஒன்றின் தலைமை செயல் அதிகாரி ஒருவர் உயிரிழந்துவிட்டதால், அவரது நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் அவரது மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தது குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
வான்கூவரை மையமாகக் கொண்டு செயல்பட்ட நிறுவனமான QuadrigaCXஇன் தலைமை செயல் அதிகாரி Gerald Cotten.
இந்தியாவுக்கு தன் மனைவியான Jennifer Robertsonஉடன் தேனிலவுக்குச் சென்றிருந்த Gerald திடீரென உயிரிழந்ததாகவும், அதனால் அவரது நிறுவனம் திவாலானதாகவும் ஒரு தகவல் வெளியாக, நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.
ஒரு காலகட்டத்தில் கிரிப்டோகரன்சி என்னும் விடயம் பரபரப்பாக பேசப்பட்டபோது, மக்கள் அந்நிறுவனத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர்.
இந்நிலையில், 2018ஆம் ஆண்டு, தனது தேனிலவுக்காக தனது மனைவி Jennifer Robertsonஉடன் இந்தியாவுக்கு சென்றார் Gerald.
ஆனால், அவர்கள் இந்தியா சென்று ஒரு மாதம் ஆன நிலையில், Gerald உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டதாக அவரது மனைவி அறிவித்தார்.
Geraldஇன் கணினியை அவரது மனைவியால் கூட இயக்க முடியாமல் போன நிலையில், அவரது நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட மக்கள் பணம் முடங்கிப்போனது.
அந்த பணத்தை எப்படி மீட்பது என தெரியாமல் மக்கள் குழம்பிப்போனார்கள்.
ஆனால், Gerald உயிரிழப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன் அவர் உயில் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த உயிலில், அவர் ரியல் எஸ்டேட்டில் 9 மில்லியன் டொலர்கள், ஒரு Lexus கார், ஒரு Cessna ரக விமானம் மற்றும் 50 அடி நீளம் கொண்ட படகு ஒன்று ஆகியவற்றை தன் மனைவியான Jennifer பேரில் எழுதி வைத்திருந்தார்.
ஆகவே, இந்தியா சென்ற அவர் திடீரென உயிரிழந்ததாக அவரது மனைவி தெரிவிக்கவே, அவர் பணத்துடன் எங்கோ தலைமறைவாகிவிட்டதாகவும், அவர் இறந்துவிட்டதாக அவரது மனைவி Jennifer நாடகமாடுவதாகவும், மோசடியில் அவருக்கும் பங்குள்ளதாகவும் Geraldஇன் நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் கருதினார்கள்.
அதைத் தொடர்ந்து அவர்கள் தனக்கு கொலை மிரட்டல்கள் விடுத்ததாக தான் எழுதியுள்ள Bitcoin Widow: Love, Betrayal and the Missing Millions என்ற புத்தகத்தில் தெரிவித்துள்ளார் Jennifer.
அவர்கள் தனக்கும், தன் குடும்பத்தினருக்கும், தொலைபேசி மூலமும், மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் மூலமும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார் Jennifer.
எங்கள் பணமா அல்லது வன்முறையா நீயே முடிவு செய்துகொள் என ஒருவரும், பல மணி நேரம் உன்னை சித்திரவதை செய்து, பிறகு உன்னை சிலுவையலறைந்து கொல்லவேண்டும் என மற்றொருவரும் தனக்கு மிரட்டல் விடுத்ததாக தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார் Jennifer.
Gerald இறந்தபோது, அவர் தன் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு 215 மில்லியன் கனேடிய டொலர்கள் கொடுக்கவேண்டும் என கணக்கிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.