அனல் பறக்கும் தேர்தல் களம்... கமலா ஹாரிஸுக்கு எதிராக ட்ரம்ப் தெரிவு செய்த இந்திய பெண்மணி
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் உடனான நேரலை விவாதம் நெருங்கிவரும் நிலையில், தமக்கு உதவியாக இந்திய வம்சாவளி பெண் அரசியல்வாதி ஒருவரை டொனால்டு ட்ரம்ப் தெரிவு செய்துள்ளார்.
தாக்குதல்களுக்கு வலுசேர்ப்பதற்காக
முன்னாள் ஜனநாயகக் கட்சி அரசியல்வாதியும் இந்திய வம்சாவளி அமெரிக்கருமான Tulsi Gabbard என்பவரை, கமலா ஹாரிஸ் மீதான தாக்குதல்களுக்கு வலுசேர்ப்பதற்காக டொனால்டு ட்ரம்ப் தமது அணியில் இணைத்துக்கொண்டுள்ளார்.
ட்ரம்பின் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் உறுதியான தகவல்களை தெரிந்துவைத்திருக்கும் இருவர் இதை வெளிப்படுத்தியுள்ளனர். நேரலை விவாதத்திற்கு தயாராகும் ட்ரம்பிற்கு தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
ட்ரம்பின் தனிப்பட்ட விடுதியிலும், குடியிருப்பிலும் முன்னெடுக்கப்பட்ட பயிற்சிகளில் Tulsi Gabbard கலந்துகொண்டுள்ளார். கமலா ஹாரிஸ் பயிற்சி பெற்ற ஒரு சட்டத்தரணி என்பதாலும், ஒரு மாகாணத்தின் சட்ட ஆலோசகராக பணியாற்றியவர் என்பதாலும், டொனால்டு ட்ரம்ப் தம்மை தயார்படுத்தி வருவாதாக தகவல் வெளியாகியுள்ளது.
செப்டம்பர் 10ம் திகதி ABC செய்திகள் நிறுவனம் இந்த நேரலையை முன்னெடுக்க உள்ளது. 2020 ஜனாதிபதி தேர்தலில் களம் கண்ட Tulsi Gabbard அதன் பின்னர் ஜனநாயகக் கட்சியில் இருந்து வெளியேறினார்.
அத்துடன் டொனால்டு ட்ரம்பின் ஆதரவாளர்கள் வட்டாரத்தில் ஒருவராக தம்மை அடையாளப்படுத்திக்கொண்டார். அப்போதிருந்தே டொனால்டு ட்ரம்புடன் நெருக்கமான நட்புறவை பேணி வருகிறார்.
மறக்க முடியாத அனுபவம்
கடந்த 2019ல் இது போன்றதொரு நேரலை விவாதத்தில் கமலா ஹாரிஸுக்கு மறக்க முடியாத அனுபவத்தை அளித்ததுடன், வெளியேறவும் காரணமானார் Tulsi Gabbard. இதன் காரணமாகவே அவரை தமது அணியில் தற்போது ட்ரம்பும் இணைத்துக் கொண்டுள்ளார்.
ஆனால் அப்போதைய கமலா ஹாரிஸ் அல்ல, தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் என அவரது ஆதரவாளர்கள் குறிப்பிடுகின்றனர். ட்ரம்புடனான முதல் நேரலை விவாதத்தில் ஜனாதிபதி ஜோ பைடன் தடுமாற பல காரணங்கள் கூறப்படுகிறது.
ஆனால், அதே நிலையை ட்ரம்ப் எதிர்கொள்ள வாய்ப்பிருப்பதாக ஹாரிஸ் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். விவாதங்களுக்கு முன்னர் தாம் எப்போதும் தயார் செய்வதில்லை என பேசிவரும் டொனால்டு ட்ரம்ப், தற்போது அதிகமாக விவாதத்திற்கு தயாராவதாக தகவல்கள் வெளியாகி வருவதே, கமலா ஹாரிஸ் மீது அவருக்கு இருக்கும் அச்சமே காரணம் என குறிப்பிடுகின்றனர்.
ஆனால், ஜோ பைடனுக்கு எதிரான நேரலை விவாதத்தின் போதும் ட்ரம்ப் கடுமையாக தம்மை தயார்படுத்திகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |