மருத்துவர்கள் உதவியுடன் மரணிப்போர் உடல் தானம்: சுவிஸ் விவாதம்
உலகில் உடல் உறுப்பு தானம் பெற காத்திருப்போர் ஏராளம். இந்நிலையில், மருத்துவர்கள் உதவியுடன் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்வோரின் உடல் உறுப்புகளை தானம் செய்யலாமே என்னும் விவாதம் சுவிட்சர்லாந்தில் துவங்கியுள்ளது.
மருத்துவர்கள் உதவியுடன் மரணிப்போர் உடல் தானம்
ஸ்பெயின், பெல்ஜியம், நெதர்லாந்து போன்ற சில நாடுகளில், மருத்துவர்கள் உதவியுடன் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்வோரின் உடல் உறுப்புகளை தானம் செய்யும் வழக்கம் உள்ளது.
ஆனால், சுவிட்சர்லாந்தில் அந்த வழக்கம் இல்லை. விடயம் என்னவென்றால், உடல் உறுப்பு தானம் பெறுவதற்காக ஏராளம் நோயாளிகள் காத்திருக்கிறார்கள்.
சுவிட்சர்லாந்தில், ஆண்டுக்கு 170 பேர் மருத்துவர்கள் உதவியுடன் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்கிறார்கள். அவர்களில் 10 சதவிகிதம் பேராவது தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்யும் உடல் நிலையுடன் இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆக, அப்படி மருத்துவர்கள் உதவியுடன் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்வோரின் உடல் உறுப்புகளை தானம் செய்யலாமே, அதற்கு சட்டப்படி எந்த தடையும் இல்லையே என்கிறது Swiss Academy of Medical Sciences.
ஆக, மருத்துவர்கள் உதவியுடன் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்வோரின் உடல் உறுப்புகளை தானம் செய்வது குறித்த விவாதம் சுவிட்சர்லாந்தில் துவங்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |