டிசம்பரில் சதுர்கிரஹி யோகம் - கோடீஸ்வரர்களாகும் 5 ராசிகள்
டிசம்பர் 5 ஆம் தேதி குரு மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைவார். தொடர்ந்து டிசம்பர் 6 ஆம் தேதி புதன் விருச்சிக ராசிக்கும், டிசம்பர் 7 ஆம் தேதி செவ்வாய் தனுசு ராசிக்கும், டிசம்பர் 16 ஆம் தேதி சூரியன் தனுசு ராசிக்கும்,

டிசம்பர் 20 ஆம் தேதி சுக்கிரன் தனுசு ராசிக்கும், டிசம்பர் 29 ஆம் தேதி புதன் தனுசு ராசிக்கும் பெயர்ச்சி அடைவார். இது தனுசு ராசியில் சதுர்கிரஹி யோகத்தையும் உருவாக்கும். இதனால் சில ராசிகள் சிறந்த பலன்களை பெறுகின்றனர்.
மேஷம்: புதிய வாய்ப்புகளைத் தரும். நிம்மதி கிடைக்கும். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.
சிம்மம்: நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். வருமானம் அதிகரிக்கலாம். ஐடி துறையில் இருப்பவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து வேலை வாய்ப்பு கிடைக்கலாம். சம்பள உயர்வுக்கு வாய்ப்புண்டு.
கன்னி: சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். கடின உழைப்பு பலனளிக்கும், மன அழுத்தம் நீங்கும். முயற்சிகள் உங்களை உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்லும்.

துலாம்: நிதி ஆதாயம் கிட்டும். வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல நேரம். தொழிலதிபர்கள் ஒரு பெரிய ஒப்பந்தத்தை பெறலாம். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
தனுசு: நிலுவையில் உள்ள பணிகள் நிறைவடையும். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் உருவாகலாம். வணிகம் சிறக்கும். நோயிலிருந்து நிவாரணம் கிட்டும்.