போருக்குத் தப்பி உக்ரைனிலிருந்து கனடா வந்த பெண் மீண்டும் உக்ரைன் திரும்பிச் செல்ல முடிவு: காரணம் என்ன தெரியுமா?
போருக்குத் தப்பி உக்ரைனிலிருந்து கனடா வந்த ஒரு பெண், மீண்டும் உக்ரைன் செல்ல முடிவெடுத்துள்ளார்.
ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து, தனது மகன் Yurii (12)உடன் கனடாவுக்குத் தப்பி வந்தார் Nadiia Kuzniak.
பல ஐரோப்பிய நாடுகளின் எல்லைகளைக் கடந்து கனடாவின் எட்மண்டனை வந்தடைந்த Nadiia, அங்கு வாழும் தனது சகோதரியான Oleksandra Sribnyak வீட்டில் மகனுடன் தஞ்சம் புகுந்தார்.
ஆனால், தாய்நாடு அவரை இழுத்தது...
ஆகவே, மனிதநேய உதவிகள் செய்வதற்காகவும், தான் விட்டுவந்த மீதமுள்ள தனது குடும்பத்தினரைக் காண்பதற்காகவும் மீண்டும் தன் தாய்நாட்டுக்குப் புறப்பட்டுவிட்டார் அவர்.
உக்ரைனில் நிலைமை அபாயகரமாக இருக்கிறது என்று கூறி அவரது சகோதரி அவரை எவ்வளவோ தடுத்திருக்கிறார். ஆனாலும், தன் மகனை பாதுகாப்பான கைகளில் ஒப்படைந்துவிட்ட நிம்மதியுடன், உக்ரைனுக்குப் புறப்பட்டுவிட்டார் Nadiia.
அவளுக்கு அபாயத்தை விட, தான் போரால் அவதியுறும் தன் தாய்நாட்டை விட்டுவிட்டு வந்துவிட்டோம் என்ற குற்ற உணர்ச்சிதான் அதிகமாக இருக்கிறது என்று கூறும் அவரது சகோதரி Oleksandra, அவள் எப்போது திரும்பி வருவாள் என்று தெரியாது, ஆனால், நிச்சயம் திரும்பி வருவேன் என்று கூறிச் சென்றிருக்கிறாள் அவள் என்கிறார்.