அயோத்தி குழந்தை ராமருக்கு குளிராமல் இருக்க சால்வைகள் போர்த்த முடிவு
குளிர்காலம் வருவதால் அயோத்தியில் உள்ள குழந்தை ராமருக்கு சால்வைகள் போர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெரும் சர்ச்சைக்கு மத்தியிலும், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியிலும் உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயிலில் கடந்த ஜனவரி 22 -ம் திகதி ஸ்ரீ பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டு கண்களில் இருந்த துணி அகற்றப்பட்டது.
தற்போது அயோத்தி ராமர் கோவிலுக்கு தினந்தோறும் பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சால்வைகள்
இந்நிலையில், அயோத்தியில் குழந்தை வடிவமாக உள்ள ராமருக்கு சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப உடைகளை அணிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
குளிர்காலத்தின் அகான் மாதம் 20-ம் திகதி தொடங்குகிறது என்பதால் இந்த மாதம் முதல் குழந்தை ராமரை கதகதப்பான சூழலில் வைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக க்வில்ட்ஸ், பஷ்மினா சால்வைகள் மற்றும் இதர டிசைனர் உடைகளை உடுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், குழந்தை ராமருக்கு நைவேத்யமாக படைப்பட்டதற்கு உலர் பழங்கள் வைக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |