உணர்ச்சிவசப்பட்டு அழுத ரசிகன்; சட்டையை கழற்றி கொடுத்து ஆறுதல்படுத்திய கால்பந்தாட்ட வீரர்
உணர்ச்சிவசப்பட்டு அழுத ரசிகனுக்கு சட்டையை கழற்றி கொடுத்து ஆறுதல்படுத்திய ரைஸின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
டெக்லான் ரைஸ்
டெக்லான் ரைஸ் கால்பந்து விளையாட்டு உலகில் இளம் வீரராகவும், நட்சத்திர வீரராகவும் டெக்லான் ரைஸ் வலம் வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
24 வயதாகும் டெக்லான் ரைஸ் வெஸ்ட் ஹாம் அணிக்காக 229 போட்டிகளில் விளையாடி இதுவரை 12 கோல்களை அடித்து அசத்தி இருக்கிறார். இவர் விளையாட்டை அபாரமாகப் புரிந்துகொண்டு, 2 கால்களிலும் பந்தைப் பிடிக்கும் திறன் கொண்டவர். டெக்லான் ரைஸ் மிட்ஃபீல்டர் இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார்.
2020ம் ஆண்டு, இங்கிலாந்து அணிக்காக ஏழு ஆட்டங்களில் சிறப்பாக விளையாடினார். இத்தாலிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 2ம் இடத்தைப் பிடித்து அசத்தினார். கடந்த ஆண்டு நடைபெற்ற FIFA 2022 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி கால்பந்து வீரர் ரைஸ் கலந்து கொண்டு விளையாடினார்.
ரைஸைப் பார்த்து அழுத ரசிகன்
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
கால்பந்து வீரர் ரைஸ் நடந்து வந்துக் கொண்டிருந்தபோது, ரசிகனான ஒரு சிறுவன் அவரைப் பார்த்தும் உணர்ச்சி வசப்பட்டு அழுதான்.
இதைப் பார்த்ததும் ரைஸ் உடனே அச்சிறுவனிடம் சென்று அவனை கட்டியணைத்து ஆறுதல்படுத்தினார். பிறகு, தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி அச்சிறுவனுக்கு பரிசாக கொடுத்து அச்சிறுவனை அன்போடு கட்டியணைத்தார்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்ததும் நெட்டிசன்கள் ரைஸின் செயலைப் பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.
After spotting a young fan in tears, Declan Rice went over to check on him and even shared his shirt! ❤️ pic.twitter.com/CaoWIW6mLe
— Sky Sports News (@SkySportsNews) May 8, 2023