மன்னர் சார்லஸ் அளிக்கும் விருந்து: சில சுவாரஸ்ய தகவல்கள்
மன்னர் சார்லஸ் சமீபத்தில் ஓமான் சுல்தானுக்கு விண்ட்சர் மாளிகையில் விருந்தளித்தார்.
அந்த விருந்தில், உணவு விளம்பப்படும் மேசையில், ஆளுக்கு ஐந்து கோப்பைகள் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், மன்னர் அளிக்கும் விருந்தில் வைக்கப்படும் அந்தக் கோப்பைகள் தொடர்பில் பட்லரான டான் என்னும் Dan McLauchlan, சில சுவாரஸ்ய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
சில சுவாரஸ்ய தகவல்கள்
மன்னர் அளிக்கும் விருந்தில் பங்கேற்கும் ஒவ்வொருவரின் முன்பும் ஐந்து முதல் ஆறு கோப்பைகள் வைக்கப்பட்டிருக்கும்.

அவற்றில், முதல் வரிசையில் வலது ஓரமாக இருக்கும் கோப்பை, குடிநீருக்கானது. அடுத்த கோப்பை, முதல் சுற்று ஒயினுக்கானது. அடுத்த கோப்பை, இரண்டாவது சுற்று ஒயினுக்கானது.
இரண்டாவது வரிசையில் இரண்டு கோப்பைகள் இருக்கும், அதில் முதல் கோப்பை, நான் இன்ன விடயத்துக்காக டோஸ்ட் செய்ய விரும்புகிறேன் என யாராவது கூறும்பட்சத்தில், அதற்காக பயன்படுத்துவது, அல்லது முந்தைய உணவின் சுவை அல்லது உணவிலுள்ள எண்ணெய் வாயில் நீடிக்கும்போது, அடுத்த உணவை சுவைக்கும் முன் வாயை சுத்தம் செய்வதற்காக ஷாம்பெயின் வைக்கும் கோப்பை.
கடைசிக் கோப்பை, இனிப்பு ஒயினுக்கானதாக இருக்கலாம் என்கிறார் டான்.

மன்னர் அளிக்கும் விருந்தில் இப்படி எக்கச்சக்கமாக வைக்கப்படுவது கோப்பைகள் மட்டுமல்ல, ஓமான் சுல்தானுக்கு அளிக்கப்பட்ட விருந்தின்போது, அந்த விருந்து மேசையில் வைக்கப்பட்டிருந்த கத்திகளின் எண்ணிக்கை 480, ஃபோர்க்களின் (forks) எண்ணிக்கை 480, ஸ்பூன்களின் எண்ணிக்கை 160, உப்பு, மிளகுப்பொடி எடுப்பதற்கான ஸ்பூன்களின் எண்ணிக்கை 124 மற்றும் service cutlery என அழைக்கப்படும், உணவு விளம்புவதற்கான கரண்டிகள் போன்றவற்றின் எண்ணிக்கை 288.
இன்னொரு விடயம், விருந்து மேசையை அலங்கரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட மாதுளம்பழங்களும், பல்வேறு வகையான பூக்களும், பக்கிங்காம் மாளிகை, விண்ட்சர் மாளிகை மற்றும் சவில் தோட்டத்திலிருந்து பறிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.