பூட்டியிருந்த வீட்டிலிருந்து வீசிய துர்நாற்றம்: பொலிசார் கண்ட அதிர்ச்சி காட்சி
ஆக்ராவில், பூட்டியிருந்த ஒரு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அந்த பகுதி மக்கள் பொலிசாருக்கு புகாரளித்தனர்.
நேற்று செவ்வாயன்று, பொலிசார் அந்த வீட்டை உடைத்து உள்ளே நுழைந்தபோது, அங்கு அதிர்ச்சியளிக்கும் காட்சி ஒன்றைக் கண்டார்கள்.
பூட்டியிருந்த வீட்டுக்குள் கண்ட அதிரவைக்கும் காட்சி
ஆம், அந்த வீட்டுக்குள் ஒரு பெண் மற்றும் ஒரு சிறுமி ஆகியோரின் உடல்கள் ஒரு போர்வையால் போர்த்தப்பட்டு வைக்கப்பட்டிருப்பதை பொலிசார் கண்டனர்.
அவர்கள் இருவரும் உயிரிழந்து ஐந்து நாட்கள் வரை ஆகியிருக்கலாம் என்பதால் அவை அழுகத்தொடங்கியிருந்தன.
உயிரிழந்தவர்கள், ஷபீனா மற்றும் அவரது மகளான இனயா என்பது தெரியவந்துள்ளது.
ஷபீனாவின் கணவரான ரஷீத் தலைமறைவாகிவிட்டார். ரஷீத்தான் ஷபீனாவையும் இனயாவையும் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், பொலிசார் அவரை தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.
ஷபீனா, ரஷீதின் இரண்டாவது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |