ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு காத்திருக்கும் புது பிரச்சனை - ரசிகர்கள் சோகம்
ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு ஏற்பட்டுள்ள புதிய பிரச்சனையால் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. டி20 தொடரின் வெற்றியின் மூலம் இந்திய அணி டி20 தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்தது.
இதனிடையே 3வது டி20 போட்டியில் இந்திய அணி வீரர் தீபக் சாஹர் பந்துவீச்சின் போது காலில் காயம் அடைந்து மைதானத்தில் இருந்து வெளியேறினார். அவருக்கு சாதாரண காயம் இருக்கும் என்ற நினைத்த நிலையில் தசை நார்கள் கிழிந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் அவர் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காயம் முழுமையாக குணமடைய ஒன்றரை மாதம் காலம் ஆகலாம் என்பதால் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக தீபக் சாஹர் முதல் பாதி ஆட்டங்களில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அணி வரலாற்றில் மிக அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட அவர் விளையாடாத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் கேப்டன் தோனிக்கு சிக்கல் எழுந்துள்ளது. இதனால் சாஹருக்கு பதிலாக தோனி யாரை தேர்வு செய்யவுள்ளார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.