இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர் காதலியை கரம் பிடித்தார் !
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான தீபக் சாஹருக்கு அவரது நீண்ட நாள் தோழியும் காதலியுமான ஜெயா பரத்வாஜிற்கும் நேற்று ஆக்ராவில் பிரமாண்டமான முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை அணியின் ஒரு போட்டியின் போது தனது நீண்ட நாள் தோழியான ஜெயா பரத்வாஜிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். இதற்கு ஜெயாவும் மைதானத்திலே சம்மதம் தெரிவிக்க இருவரும் கடந்த 1 வருடத்திற்கும் மேலாக காதலித்து வந்தனர்.
இருவரும் தங்களது உறவை அடுத்தகட்டத்தை நோக்கி நகர முடிவு செய்து ஜூன் 1ம் தேதி அவர்கள் திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் தீபக் - ஜெயா ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று பிரமாண்டமான முறையில் திருமணம் செய்துகொண்டனர்.
இதில் ராகுல் சாஹர், மற்ற நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தீபக் சாஹரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி டெல்லியில் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் தோனி, விராட் கோலி, மற்றும் இந்திய அணியின் பிற வீரர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.