இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய நட்சத்திர வீரர்கள் விலகல்!
இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் மற்றும் நட்சத்திர பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் விலகியுள்ளனர்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி பிப்ரவரி 24ம் திகதி லக்னோ மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் மற்றும் நட்சத்திர பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் விலகியுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் ஃபீல்டிங்கி போது சூர்யகுமாருக்கு லேசாக எலும்பு முறிவு ஏற்பட்டது.
தீபக் சாஹருக்கு பந்துவீச்சின் போது காயம் அடைந்தார். இருவரும் இப்போது தங்கள் காயங்களிலிருந்து குணமடைய சிகிச்சை பெறுவதற்காக பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்குச் செல்வார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி:
- ரோகித் சர்மா (கேப்டன்)
- ருதுராஜ் கெய்க்வாட்
- ஸ்ரேயாஸ் அய்யர்
- சஞ்சு சாம்சன்
- இஷான் கிஷன்
- வெங்கடேஷ் அய்யர்
- தீபக் ஹூடா
- ரவீந்திர ஜடேஜா
- யசுவேந்திர சாஹல்
- ரவி பிஷ்னோய்
- குல்தீப் யாதவ்
- முகமது சிராஜ்
- புவனேஸ்வர் குமார்
- ஹர்ஷல் படேல்
- பும்ரா (துணை கேப்டன்)
- அவேஸ்கான்
? UPDATE ?: Deepak Chahar and Suryakumar Yadav ruled out of @Paytm #INDvSL T20I Series. #TeamIndia
— BCCI (@BCCI) February 23, 2022
More Details ?