மகேந்திர சிங் தோனியை போலவே அதிர்ஷ்டம்! உலக சாதனை படைக்கப்போகும் இந்திய வீரர்
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் தீபக் ஹூடா உலக சாதனை ஒன்றுக்கு சொந்தக்காரராக போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக தோனியை தான் ரசிகர்கள், அதிர்ஷ்ட நாயகன் என்று பாராட்டி வருவார்கள். இதோடு அவர் தொட்டது எல்லாம் துலங்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்களும் கூறுவார்கள்.
தற்போது அந்த பெயரை தீபக் ஹூடா பெற்றுள்ளார். ஆம், தீபக் ஹூடா இதுவரை 9 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளை இந்தியாவுக்காக விளையாடி இருக்கிறார். இதில் ஒரு முறை கூட இந்திய அணி தோற்றது இல்லை.
இதன் மூலம் தீபக் ஹுடா விளையாடிய 14 போட்டிகளிலும் இந்தியா வென்றுள்ளது. இதனால் இன்றைய ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் போட்டியில் வென்றால், தொடர்ந்து 15 போட்டிகளை வென்று சாதனை படைப்பார்.
இதற்கு முன்பு ரோமேனிய வீரர் சத்விக் தொடர்ந்து 15 போட்டிகளில் விளையாடி ரோமேனிய அணி வென்று இருக்கிறது. ஆனால், டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணி என்று பார்த்தால் அதில் தீபக் ஹூடா தான் முதல் இடம் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.