தீபிகா படுகோன் உடல் அழகிற்கு காரணம் இது தான் - நீங்களும் Try பண்ணி பாருங்க
தீபிகா படுகோன் நீண்ட நாட்களாக பாலிவுட் துறையில் இருக்கும் பிரபல நடடிகையாகும். அவர் தனது உடலை பராமரிக்கும் விதம் மூலமாக தான் தனது வெற்றியை பெற்று வருகிறார்.
ஒழுக்கமான வாழ்க்கை முறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, ஆரோக்கியமான உணவுக்கு முன்னுரிமை அளிக்கும் அதே வேளையில், தங்கள் உணவு மற்றும் உடற்பயிற்சி நடைமுறைகளை வெளியிலும் அடிக்கடி பகிர்ந்துக்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்தவகையில் இவர் தனது உடம்பை எப்படி சீராக பராமரிக்கிறார் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
- தசை வலிமையை அதிகரிக்கவும் உடல் சமநிலையை மேம்படுத்தவும் தீபிகா pilates-ஐ வழக்கமான பயிற்சியாக வைத்துள்ளார்.
- உடல் ஆரோக்கியமாக இருக்க யோகா செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதற்கு இவர் சக்ராசனம் என்ற போஸை முயற்சி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
- நீச்சல், பூப்பந்து விளையாடுதல் மற்றும் நடனம் போன்ற செயல்பாடுகளை தினசரி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
- மேலும் உடற்பயிற்சி, நன்றாக தூங்குதல், சத்தான உணவை எடுத்துக்கொள்வது எனது சருமத்தை பராமரிக்க உதவுகிறது என்று கூறியுள்ளார்.
தீபிகா படுகோனின் டயட்
அவரது உணவுத் திட்டத்தில் முழு தானியங்கள், புரதங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவை அடங்கும்.
- எழுந்த பிறகு - ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர் குடித்தல்.
- காலை உணவு- இரண்டு முட்டை + குறைந்த கொழுப்புள்ள பால் அல்லது தென்னிந்திய உணவு அதாவது உப்மா, இட்லி, தோசை
- மதிய உணவுக்கு முன் - பழங்கள்
-
மதிய உணவு - 2 சப்பாத்திகள், மீன் மற்றும் புதிய காய்கறிகள், குயினோவா சாலட்
- மாலை ஸ்நாக்ஸ் - நட்ஸ் மற்றும் காபி
-
இரவு உணவு - சப்பாத்தி, காய்கறிகள் மற்றும் சாலட்
இவர் ஒரு நாளும் வெறும் வயிற்றில் இருப்பதில்லை, ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் பிறகு பழங்கள் அல்லது இயற்கையான பழச்சாறுகள் அல்லது தேங்காய் தண்ணீர் மற்றும் ஸ்மூத்திகளை எடுத்துக்கொள்வார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |