திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை தீபிகா படுகோனே
தீபிகா படுகோனே இன்று மருத்துவமனையில் இருந்து திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ஷாருக் கானுடன் பதான் படத்தை முடித்த தீபிகா படுகோனே, அவருடன் இணைந்து ஜவான் படத்திலும் நடித்து வருகிறார்
பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனே உடல்நலக் குறைவு காரணமாக திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பிரபாஸ், அமிதாப் பச்சன் இணைந்து நடிக்கும் ப்ராஜெக்ட் கே படத்தில் தீபிகா படுகோனே நடித்து வருகிறார். கடந்த சூன் மாதம் ஐதராபாத்தில் இதன் படப்பிடிப்பு நடந்தபோது தீபிகா படுகோனேவுக்கு இதய துடிப்பு விகிதம் அதிகரித்ததால் உடனடியாக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
அவருக்கு தொடர்ச்சியாக பல மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்களின் சிகிச்சைக்கு பிறகு அவரது உடல்நலம் தேறி வருவதாகவும் தீபிகாவின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தொடர்ச்சியான படப்பிடிப்புகளில் கலந்துகொள்வதால் தீபிகாவின் உடல்நிலை பாதித்ததாக கூறப்படுகிறது.