பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில்… இறுதிப் போட்டியில் உலக கோப்பையை அறிமுகப்படுத்தி வைத்த இந்திய நடிகை
கத்தாரில் நடைபெற்ற பிரான்ஸ்-அர்ஜென்டினா இடையிலான உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிரபல நடிகை தீபிகா படுகோன் வெற்றி கோப்பையை இரண்டு அணிக்களுக்கும் அறிமுகப்படுத்தினார்.
அர்ஜென்டினா வெற்றி
உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் கடந்த மாதம் தொடங்கிய நிலையில், தோஹாவில் உள்ள லுசைல் மைதானத்தில் நேற்று இறுதிப் போட்டி நடைபெற்றது.
இதில் பிரான்ஸ் அணியை எதிர்கொண்ட அர்ஜென்டினா அணி, பெனால்டி சூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி உலக கோப்பை-யை அர்ஜென்டினா தட்டி சென்றுள்ளது.
Here’s #DeepikaPadukone unveiling the trophy at the closing ceremony of #FIFAWorldCup pic.twitter.com/aEDDwQ1LLa
— Sonal Kalra ?? (@sonalkalra) December 18, 2022
உலக கோப்பை வெற்றி பெற வேண்டும் என்ற மிகப் பெரிய கனவுடன் காத்து இருந்த கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி வெற்றி கோப்பையை கைப்பற்றி கனவை நனவாக்கியுள்ளார்.
உலக கோப்பையை அறிமுகப்படுத்திய தீபிகா
பிரான்ஸ்- அர்ஜென்டினா அணிகளுக்கு இடையிலான போட்டி தொடங்குவதற்கு முன் உலக கோப்பையை அறிமுகப்படுத்தும் சிறப்பு தருணம் லுசைல் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் முன்னாள் ஸ்பெயின் கோல் கீப்பர் மற்றும் கேப்டன் இகர் கேசிலாஸ் உடன் இணைந்து இந்திய பிரபல பாலிவுட் நட்சத்திரமான தீபிகா படுகோன் உலக கோப்பையை இரு அணிகளுக்கும் அறிமுகப்படுத்தினார்.
The big unveil!?#DeepikaPadukone unveiled the trophy at the #FIFAWorldCup Finals. pic.twitter.com/U7TpjFOIkn
— Filmfare (@filmfare) December 19, 2022
தீபிகா படுகோன் கடந்த மே, 2022 இல் ஆடம்பர பிராண்டான லூயிஸ் உய்ட்டனின் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இயக்குனர் சித்தார்த் இயக்கத்தில் நடிகர் ஷாருக் கான் மற்றும் தீபிகா படுகோன் இணைந்து நடித்து இருக்கும் பாதன் திரைப்படத்தின் காட்சிகள் சர்ச்சைக்குள்ளாகி வரும் நிலையில், தீபிகா உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் கோப்பையை அறிமுகப்படுத்தி இருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.