எனது குடும்பத்தால் தான் இது சாத்தியமானது! காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற தினேஷ் கார்த்திக் மனைவி பெருமிதம்
* தனது மனைவி தீபிகா பல்லிக்கல்லுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்ததை மகிழ்ச்சியுடன் ஏற்கும் விதமாக தினேஷ் கார்த்திக், அந்த ட்வீட்டை ரீட்வீட் செய்துள்ளார்.
2022 காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் முன்னணி இணை சவுரவ் கோசல் - தீபிகா பல்லிகல் வெண்கல பதக்கம் வென்றது.
இதையடுத்து அவர்களை வாழ்த்தி இந்திய பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டார். அதில், காமன்வெல்த்தில் பல்வேறு விளையாட்டுகளில் நமது வீரர்கள் சிறந்து விளங்குவதைப் பார்ப்பது எப்போதுமே மகிழ்ச்சி அளிக்கிறது. ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக @SauravGhosal மற்றும் @DipikaPallikal ஆகியோருக்கு வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.
தனது மனைவி தீபிகா பல்லிக்கல்லுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்ததை மகிழ்ச்சியுடன் ஏற்கும் விதமாக தினேஷ் கார்த்திக், அந்த ட்வீட்டை ரீட்வீட் செய்துள்ளார்.
இதனிடையில் பதக்கம் வென்ற புகைப்படத்தை தீபிகாவும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அதில், எனது குடும்பம், எனது குழு மற்றும் என்னைச் சுற்றியிருந்த பல்வேறு நபர்களால் மட்டுமே இந்த வெற்றி சாத்தியமானது. உங்கள் வாழ்த்துக்களுக்கு அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.