நானும் என் கணவரும் எடுத்த முடிவு! தாயான பின்னர்... மனம் திறந்த தினேஷ் கார்த்திக் மனைவி
காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வரும் தீபிகா பல்லிக்கல் தாயான பின்னர் விளையாட்டுக்கு மீண்டும் திரும்பியது குறித்து மனம் திறந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் மனைவியான தீபிகா பல்லிக்கல் கூறுகையில், பிரசவத்திற்கு பிறகு மீண்டும் விளையாட தொடங்க வேண்டும் என்பதே என் எண்ணமாக இருந்தது.
முதலில் குடும்பத்தை தொடங்க நானும் என் கணவரும் முடிவு செய்தோம். பின்னர் மீண்டும் ஸ்குவாஷ் விளையாட்டில் ஈடுபட தொடங்கினேன். நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஸ்குவாஷ் மைதானத்திற்கு வந்து, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு போதுமான உடல் தகுதியைப் பெற்று அணிக்குத் தேர்ந்தெடுக்க விரும்பினேன்.
அது நடந்துள்ளது, என் கணவர் தினேஷ் மீண்டும் (டி20 சர்வதேச) அணியில் இடம்பிடித்துள்ளதால், எனது தோள்களில் அது அதிக பொறுப்பை விட்டுச் செல்கிறது. நான் அதைப் பற்றி யோசிக்கவில்லை, மீண்டும் விளையாட்டுக்கு திரும்பியது ஒரு பெரிய கெளரவம் என கூறியுள்ளார்.
zeenews