மகளிர் ஆசிய கிண்ணம்; தாய்லாந்தை வீழ்த்திய இந்தியா - தீப்தி சர்மா உலக சாதனை

Thailand Indian Cricket Team Deepti Sharma
By Karthikraja Aug 31, 2026 06:00 AM GMT
Report

மகளிர் ஆசிய கிண்ண போட்டியில், இந்தியா தாய்லாந்தை வீழ்த்தியுள்ளது.

தாய்லாந்தை வீழ்த்திய இந்தியா

2026 மகளிர் ஆசிய கிண்ணம் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் திகதி தொடங்கி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 

மகளிர் ஆசிய கிண்ணம்; தாய்லாந்தை வீழ்த்திய இந்தியா - தீப்தி சர்மா உலக சாதனை | Deepti Sharma Record As Highest Wicket Taker It20

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் தாய்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தாய்லாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் துடுப்பாட்டம் ஆடிய இந்திய மகளிர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்கள் குவித்தது. 

மகளிர் ஆசிய கிண்ணம்; தாய்லாந்தை வீழ்த்திய இந்தியா - தீப்தி சர்மா உலக சாதனை | Deepti Sharma Record As Highest Wicket Taker It20

அதிகபட்சமாக இந்தியா தரப்பில் சஃபாலி வர்மா 64 ஓட்டங்கள் குவித்தார். தாய்லாந்து தரப்பில் சுலீபோர்ன் லாவோமி 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

160 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய தாய்லாந்து மகளிர் அணி, 16.1 ஓவர்களில் 65 ஓட்டங்கள் மட்டுமே குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட் ஆனது. 

மகளிர் ஆசிய கிண்ணம்; தாய்லாந்தை வீழ்த்திய இந்தியா - தீப்தி சர்மா உலக சாதனை | Deepti Sharma Record As Highest Wicket Taker It20

இதன் மூலம், 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது.

தீப்தி சர்மா உலக சாதனை

1.1 ஓவர்கள் வீசி ஓட்டங்கள் எதுவும் வழங்காமல், 3 விக்கெட்களை கைப்பற்றிய தீப்தி சர்மா புதிய சாதனையை படைத்துள்ளார். 

மகளிர் ஆசிய கிண்ணம்; தாய்லாந்தை வீழ்த்திய இந்தியா - தீப்தி சர்மா உலக சாதனை | Deepti Sharma Record As Highest Wicket Taker It20

இதன் மூலம், சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீராங்கனை என்ற உலக சாதனையை தீப்தி சர்மா படைத்துள்ளார். 

மகளிர் சாம்பியன்ஸ் டிராபி தொடர்: நடத்தும் உரிமையை இழந்த இலங்கை

மகளிர் சாம்பியன்ஸ் டிராபி தொடர்: நடத்தும் உரிமையை இழந்த இலங்கை

முன்னதாக, தாய்லாந்து வீராங்கனை புத்தாவோங் 170 ஓட்டங்களுடன் முதலிடத்தில் இருந்த நிலையில், 171 விக்கெட்களை கைப்பற்றி முதலிடம் பிடித்துள்ளார்.

மேலும், ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனாவுக்குப் பிறகு, 150 சர்வதேச T20 போட்டிகளில் விளையாடிய 3வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை தீப்தி ஷர்மா பெற்றுள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US