தேர்தலில் தோல்வி: டிரம்ப்-ன் பதிவால் அடுத்தடுத்த பரபரப்பு
அமெரிக்க இடைக்கால தேர்தலில் குடியரசுக் கட்சி தோல்வியை சந்தித்துள்ளது.
அமெரிக்காவின் கீழ்சபை 435 இடங்களை கொண்டது, இதில் பெரும்பான்மை பெற குறைந்தது 218 இடங்களை பிடிக்க வேண்டும். மேல்சபை 100 இடங்களை கொண்டது, இதில் பெரும்பான்மை பெற 50 இடங்கள் தேவை.
கீழ்சபையில் உள்ள 435 இடங்களுக்கும், 35 செனட் சபை இடங்களுக்கும் பல்வேறு மாகாணங்களின் ஆளுநர்கள், உள்ளாட்சி பதவிகளுக்கான வாக்குபதிவு நேற்று நடைபெற்றது.
இன்று முதல் முடிவுகள் வெளியான நிலையில் இரு அவைகளையும் ஜனநாயக கட்சி கைப்பற்றியுள்ளது.
கீழவையில் பெரும்பான்மைக்கு 218 இடங்கள் தேவை என்ற நிலையில் ஜனநாயக கட்சி 218 இடங்களிலும், குடியரசுக்கட்சி 113 இடங்களிலும் வெற்றி பெற்றது.
மேலவைக்கு 50 இடங்கள் தேவை என்ற நிலையில் ஜனநாயக கட்சி 52 இடங்களையும், குடியரசு கட்சி 40 இடங்களையும் கைப்பற்றியது.
இரு அவைகளையும் ஜனநாயக கட்சி கைப்பற்றி உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
டிரம்ப் பதிவு
இந்நிலையில் ஒருவேளை நான் போட்டியிட்டிருந்தால் நாங்கள் இமாலய வெற்றியை பதிவு செய்திருப்போம் என பதிவிட்டிருந்தார்.
சிறிது நேரத்தில் வீட்டோ என அச்சிடப்பட்ட தொப்பியை பதிவிட்டுள்ளார். அதாவது, இரு அவைகளிலும் ஜனநாயக கட்சி நிறைவேற்றும் சட்டத்தை தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்யப்போவதை தான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
