அமைதியாக மன்னர் சார்லசுடைய பட்டத்தை மாற்றிய கனடா: பிரித்தானியாவைக் காணோம்
கனடா, அமைதியாக மன்னர் சார்லசுடைய பட்டத்தை மாற்றியுள்ளது. அத்துடன், இதுவரை மன்னருடைய பட்டத்தில் இடம்பெற்றுவந்த பிரித்தானியா தொடர்பான பெயரையும் நீக்கிவிட்டது அந்நாடு.
15 நாடுகளின் தலைவராகிய மன்னர் சார்லஸ்
மன்னர் சார்லஸ், பிரித்தானியாவுக்கு மட்டுமல்ல, கனடா, அவுஸ்திரேலியா உட்பட 15 காமன்வெல்த் நாடுகளுக்கு அவர் தலைவர் என்பதை பலரும் அறிந்திருக்கக்கூடும்.
இருந்தபோதிலும், மகாராணியார் இரண்டாம் எலிசபெத் மறைவைத் தொடர்ந்து, மன்னர் சார்லஸ் அவரது இடத்துக்கு வந்ததுமே, சில நாடுகள் மன்னரை தங்கள் தலைவராக ஏற்பது தொடர்பில் தயக்கம் காட்டின.
முன்னர் பிரித்தானியாவின் ஆட்சியின் கீழ் இருந்த நாடுகளும், காலனி ஆதிக்கத்தின்போது பிரித்தானியாவால் தாங்கள் அனுபவித்த கொடுமைகள் குறித்த விடயங்களை மீண்டும் எண்ணிப்பார்க்கத் துவங்கின.
UPDATE: there is significant change to the wording of the Canadian Royal Styles and Titles
— Patricia Treble (@PatriciaTreble) April 17, 2023
“Charles the Third, by the Grace of God King of Canada and his other Realms and Territories, Head of the Commonwealth”
/1 update https://t.co/kvrzlzjeZ8
அமைதியாக மன்னர் சார்லசுடைய பட்டத்தை மாற்றிய கனடா
இந்நிலையில், கனடா மன்னருடைய பட்டத்தில் அமைதியாக சில மாற்றங்களைச் செய்துள்ளது. அதாவது, இதற்கும் முன் கனடாவின் தலைவராக இருந்த மகாராணியாருக்கு, ‘Queen Elizabeth the Second, by the Grace of God of the United Kingdom, Canada and Her other Realms and Territories Queen, Head of the Commonwealth, Defender of the Faith." என்ற பட்டம் இருந்தது.
மகாராணியாரின் மறைவைத் தொடர்ந்து அந்த பதவிக்கு வந்த மன்னரும் அதேபோலத்தான் அழைக்கப்படவேண்டும், மன்னர் என்ற பெயர் தவிர்த்து. ஆனால், கனடா அந்த பட்டத்தை, ’Charles the Third, by the Grace of God King of Canada and His other Realms and Territories, Head of the Commonwealth.’ என்று மாற்றியுள்ளது.
Credit: Getty
அவரது பட்டத்தில், பிரித்தானியாவின் மன்னர் என்ற பெயரையே காணோம்!
அத்துடன், மத நம்பிக்கை அல்லது கடவுள் நம்பிக்கையைக் குறிக்கும் Defender of the Faith என்ற பட்டத்தையும் கனடா அகற்றிவிட்டது.
ஏற்கனவே பார்படாஸ் நாடு, மகாராணியார் உயிருடன் இருக்கும்போதே, எங்களுக்கு மன்னர் குடும்பத்தின் ஆட்சி வேண்டாம் என்று கூறி தங்களை குடியரசாக அறிவித்துவிட்டது.
இந்நிலையில், கனடாவும் இப்படி ஒரு மாற்றத்தைச் செய்துள்ளது மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வாக கருதப்படுகிறது.
ஏனென்றால், மன்னருடைய முடிசூட்டுவிழாவுக்குப் பின், மேலும் சில நாடுகள் மன்னருடைய ஆட்சியிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ளலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.