நடப்பு சாம்பியன் இங்கிலாந்து வெளியேறியது! சோகத்தில் ரசிகர்கள்
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்து உலகக்கோப்பையை விட்டு வெளியேறியது.
லபுசாக்னே 71
அகமதாபாத்தில் நடந்த உலகக்கோப்பை போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியில் ஹெட் (11), வார்னர் (15) அடுத்தடுத்து வோக்ஸ் ஓவரில் ஆட்டமிழந்தனர்.
அதன் பின்னர் களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் 44 ஓட்டங்களும், லபுசாக்னே 71 ஓட்டங்களும் விளாசினார். கேமரூன் கிரீன் 47 ஓட்டங்களும், ஸ்டோய்னிஸ் 35 ஓட்டங்களும், ஆடம் ஜம்பா 29 (19) ஓட்டங்களும் எடுக்க அவுஸ்திரேலியா 286 ஓட்டங்கள் குவித்தது.
Getty Images
இங்கிலாந்து தரப்பில் கிரிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளும், விக்கெட்டுகளும் கைப்பற்றினர். அடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோவ் முதல் பந்திலேயே அவுட் ஆனார்.
மலான் - ஸ்டோக்ஸ் அரைசதம்
அதனைத் தொடர்ந்து ஜோ ரூட் 13 ஓட்டங்களில் வெளியேற தாவீத் மலான் மற்றும் பென் ஸ்டோக்ஸ் கூட்டணி அமைத்தனர். மலான் 50 ஓட்டங்களில் அவுட் ஆக, ஜோஸ் பட்லர் 1 ரன்னில் ஜம்பா ஓவரில் ஆட்டமிழந்தார். ஸ்டோக்ஸ் 64 ஓட்டங்கள் எடுத்தார்.
மொயீன் அலி (42), கிறிஸ் வோக்ஸ் (32) ஆகியோர் அணியின் வெற்றிக்காக போராடினாலும், அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து அணி 48.1 ஓவரில் 253 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆகி தோல்வியுற்றது.
Andrew Boyers/Reuters
6வது தோல்வியை சந்தித்ததால் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி உலகக்கோப்பை தொடரை விட்டு வெளியேறியது. இதனால் இங்கிலாந்து ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
Punit Paranjpe/AFP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |