பிரித்தானிய அமைச்சரவையில் முக்கிய மாற்றம்: பதவியை ராஜினாமா செய்தார் பாதுகாப்புச் செயலர்
பிரித்தானியாவின் பாதுகாப்புச் செயலர், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பதவியை ராஜினாமா செய்த பாதுகாப்புச் செயலர்
பிரித்தானியாவின் பாதுகாப்புச் செயலரான பென் வாலேஸ் (Ben Wallace), தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் ரிஷி சுனக்குக்கு அனுப்பியுள்ளார். அதை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
என்ன காரணம்?
பிரித்தானியாவின் பாதுகாப்புச் செயலரான பென் வாலேஸ் தனது பதவியை ராஜினாமா செய்ததற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.
நேட்டோ உச்சி மாநாடு ஒன்றில், உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கிக்கொண்டே இருக்க, பிரித்தானியா ஒன்றும் அமேசான் நிறுவனம் அல்ல என்று பென் வாலேஸ் கூறியதைத் தொடர்ந்து சர்ச்சை உருவாகியது.
அத்துடன், அவரை நேட்டோவின் அடுத்த தலைவராக்க எடுக்கப்பட்ட பிரித்தானியாவின் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.
இந்த கோடையின் துவக்கத்திலேயே அமைச்சரவையில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்த பென் வாலேஸ், இன்று காலை பிரதமர் ரிஷி சுனக்கிற்கு எழுதிய கடிதத்தில், ’நான் புறக்கணித்த வாழ்க்கையின் சில பகுதிகளில் முதலீடு செய்வதற்காகவும், புதிய வாய்ப்புகளை ஆராய்வதற்காகவும் பதவி விலகுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த பாதுகாப்புச் செயலர் யார்?
இதற்கிடையில், நீண்ட காலம் கேபினட்டில் அமைச்சராக இருக்கும் Grant Shapps அடுத்த பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் தற்போது எரிசக்தி பாதுகாப்பு மற்றும் நிகர பூஜ்ஜியத்திற்கான மாநில செயலாளர் என்னும் பொறுப்பிலிருக்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |