அஸ்வின்-மோர்கன், டிம் சவுதி இடையே வார்த்தை போர் ஏற்பட்டதற்கு இது தான் காரணம்! உண்மையை உடைத்த தினேஷ் கார்த்திக்
ஷார்ஜாவில் நடைபெற்று போட்டியில் அஸ்வின்-மோர்கன், டிம் சவுதி இடையே வார்த்தை போர் ஏற்பட்டதற்கான காரணம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நேற்று ஷார்ஜாவில் நடந்த போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி கொல்கத்தா வெற்றிப்பெற்றது.
போட்டியின் போது டெல்லி வீரர் அஸ்வின் அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்பும் போது கொல்கத்தா வீரர்கள் டிம் சவுதி மற்றும் கேப்டன் மோர்கனுடன் வார்த்தை மோதல் ஏற்பட்டது.
இச்சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலானது. ஆனால், ஏதனால் தகராறு ஏற்பட்டது என்பது மர்மமாகவே இருந்தது.
தற்போது, அஸ்வின்-மோர்கன், டிம் சவுதி இடையே உக்கிரமான மோதல் ஏற்பட்டதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
போட்டிக்கு பின் பேட்டியளித்த கொல்கத்தா அணி விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், டிம் சவுதி வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் அஸ்வின் அவுட்டானார்.
அதற்கு முன் வெங்கடேஷ் ஐயர் வீசிய ஓவரின் கடைசி பந்தில் நடந்த சம்பவம் இந்த வார்த்தை போருக்கு காரணம்.
When you mess up with the #Master ?@ashwinravi99 ???pic.twitter.com/1voQfPHTV0
— Sriraj Namboodiri (@sriraj_n) September 29, 2021
வெங்கடேஷ் ஐயர் வீசிய ஓவரின் கடைசி பந்தை அடித்த பந்த் ஒரு ரன் ஓடினார். பந்தை பிடித்து ராகுல் திரிபாதி வீசயது ரிஷப் பந்த் கையில் பட்டுச் சென்றது.
இதனையடுத்து, அஸ்வின் அழைக்க (அஸ்வின்-பந்த்) இருவரும் கூடுதல் ரன் எடுத்ததனர். இதை மோர்கன் விரும்பவில்லை.
இதனால், தான் அஸ்வின்-மோர்கன், டிம் சவுதி இடையே வார்த்தை போர் ஏற்பட்டது என தினேஷ் கார்த்திக் கூறினார்.