கனடாவின் மின் சாதன நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள அவசர தகவல்
கனடாவில், காற்றின் ஈரப்பதத்தைக் குறைப்பதற்காக பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட நிறுவன தயாரிப்பான dehumidifier என்னும் மின்சாதனங்களை உடனே திருப்பிக் கொடுக்குமாறு அந்நிறுவனம் வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
அதிக சூடாதல் மற்றும் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளதாக தெரியவந்துள்ளதைத் தொடர்ந்து, சுமார் 2.5 மில்லியன் dehumidifierகளை திரும்பப் பெறுமாறு கனடாவின் சுகாதாரத்துறையும் அமெரிக்காவின் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையமும் வலியுறுத்தியுள்ளதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த dehumidifierகள் அனைத்தும் New Widetech என்ற நிறுவனத்தின் தயாரிப்புகள் என்றாலும், அவை வெவ்வேறு Brand Nameகளில் விற்பனையாகின்றன. என்னென்ன பெயர்களில் விற்பனையாகும் dehumidifierகள் திரும்பப்பெறப்பட உள்ளன என்ற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- AeonAir.
- Amana.
- ArcticAire.
- Classic.
- Commercial Cool.
- Danby.
- Danby Designer.
- Danby Premiere.
- De'Longhi.
- Edgestar.
- Friedrich.
- Generations.
- Haier.
- Honeywell.
- JMATEK/AirTek.
- Idylis.
- Ivation.
- perfect aire.
- SuperClima.
- Whirlpool
- Whynte.
நுகர்வோர் உடனடியாக இந்த மின்சாதனங்களை பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ளுமாறும், New Widetech நிறுவனத்தை தொடர்புகொண்டு அந்த மின் சாதனத்துக்கான தொகையை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறும் அந்நிறுவனம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
கனடாவில், இந்த நிறுவன dehumidifierகள் இரண்டு தீப்பற்றியதால் அல்லது புகை ஏற்பட்டதால் பாதிப்பு ஏற்பட்டதாக புகார்கள் வந்துள்ளன. ஆனாலும் ,யாருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை.