ஸ்மார்ட்போனில் Search History-யை எளிதாக அழிப்பது எப்படி?
இணையம் என்பது எப்போதுமே பாதுகாப்பான இடம் கிடையாது! நம்முடைய சுய விவரங்கள் எப்படியெல்லாம் திருடப்படுகிறது என்பதை அடிக்கடி பார்க்கிறோம்.
அந்த வகையில், நீங்கள் உங்களது பிரவுஸரை மிகுந்த பாதுகாப்புடன் அணுக வேண்டும். பெரும்பாலான வெப் பிரவுஸர்களில் உங்கள் தகவல்களை நீண்ட காலத்திற்கு கண்டு கொள்ளாமல் விட்டு விட்டீர்கள் என்றால், பிற இணையதளங்களில் லாகின் செய்யும்போது சிக்கல் வரக் கூடும்.
இதைத் தவிர்க்க வேண்டும் என்றால் உங்கள் சர்ச் ஹிஸ்டரி, கேச்சே ஹிஸ்டரி ஆகியவற்றையும், கூகிஸ்களையும் நீங்கள் அவ்வபோது டெலீட் செய்ய வேண்டும்.
இப்படி செய்வதால் தகவல்கள் பாதுகாக்கப்படுவதோடு, செல்போனின் வேகமும் அதிகரிக்கும்.
ஐபோன்
கூகுளில் மை ஆக்டிவிட்டி என்ற ஆப்சன்
இங்கு அனைத்து ஆக்டிவிட்டிகளும் காண்பிக்கும். அதில், ஆக்டிவிட்டி மீது டெலீட் என்பதை கிளிக் செய்யவும்.
ஆல் டைம் என்பதன் மீது டேப் செய்யவும்.
இப்போது நெக்ஸ்ட் கொடுத்து, டெலீட் என்பதன் மீது டேப் செய்யவும். இப்போது, ஒரே முயற்சியில் உங்கள் சேர்ச் ஹிஸ்டரி முழுமையாக டெலீட் செய்யப்படும்.
ஆண்ட்ராய்டு
குரோம் ஆப் ஓப்பன் செய்யுங்கள்.
இதில் உள்ள 3 டாட்ஸ் மீது டேப் செய்து, ஹிஸ்டரி என்பதை தேர்வு செய்யவும்.
கிளியர் பிரவுஸிங் டேட்டா என்பதை டேப் செய்யவும்.
நீங்கள் எந்த நாளில் இருந்து எது வரையில் டேட்டாவை கிளியர் செய்ய விரும்புகிறீர்கள் என்பதை தேர்வு செய்யலாம். அனைத்தையும் டெலீட் செய்ய ஆல் டைம் மீது டேப் செய்யவும்.