வகுப்பறையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த 9 வயது மாணவி: டெல்லியில் அதிர்ச்சி
Delhi 9 year old school girl dies after collapse: டெல்லியில் 9 வயது மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் டெல்லியில் 9 வயது மாணவி ஒருவர், வகுப்பறையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
9 வயது மாணவி
டெல்லியின் மயூரி விஹார் இரண்டாம் கட்டப் பகுதியில் உள்ள Lovely Heritage பாடசாலையில், பயின்று வந்த 9 வயது மாணவி ஒருவர் விளையாட்டு வகுப்பு முடிந்து, வகுப்பறைக்கு திரும்பியதும் மயங்கி விழுந்துள்ளார்.
இதனைக் கண்ட சக மாணவர்கள் அதிர்ச்சியடைய, அங்கு வந்த ஆசிரியர் மாணவியைத் தூக்கி சுயநினைவை மீட்க முயற்சிக்கிறார்.
ஆனால், அந்த முயற்சிகள் பலனளிக்காததால் ஊழியர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு மாணவியை அனுமதிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர் அவர் வேறொரு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட, அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே மாணவி இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
ஆரம்பகட்ட தகவல்களின்படி, குறித்த மாணவி மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
என்றாலும், வியாழக்கிழமை நடைபெறவுள்ள பிரேத பரிசோதனைக்குப் பிறகே இறப்பிற்கான சரியான காரணம் உறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.