பெட்ரோல் வாகனங்களுக்கு தடை விதிக்க டெல்லி திட்டம்., மின்சார வாகனங்களுக்கு ஊக்குவிப்பு
டெல்லி அரசு, நகரத்தின் காற்று மாசை குறைக்கும் நோக்கில், பெட்ரோல் ஆட்டோ ரிக்ஷா, ஸ்கூட்டர் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு தடை விதிக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய கொள்கையின் படி, 2027 முதல் புதிய லைசன்ஸ் பிளேட் சிறிய மின்சார ட்ரக் மற்றும் e-ரிக்ஷாக்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
2028 முதல் மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் மின்சார மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
டெல்லி அரசு, 2030-க்குள் நகரத்தின் வாகனங்களில் குறைந்தது 30 சதவீதம் மின்சார வாகனங்களாக மாற்றப்படும் என எதிர்பார்க்கிறது.

தற்போது, டெல்லி காற்று மாசுபாட்டில் 23 சதவீதம் வாகனங்களில் வெளியாகும் புகை மட்டுமே கொண்டுள்ளன.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த திட்டத்தை “Gamechanger” எனக் குறிப்பிடுகின்றனர். IIT டெல்லி பேராசிரியர் விகாஸ் நிமேஷ், “இந்த கொள்கை உற்பத்தியாளர்களை புதிய மின்சார வாகனங்களை உருவாக்க ஊக்குவிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், விமர்சகர்கள், “இரண்டு ஆண்டுகளில் பெட்ரோல் வாகனங்களை முழுமையாக நிறுத்துவது சாத்தியமா?” என்ற கேள்வி எழுப்புகின்றனர். மேலும், பொதுப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தாமல், தனிப்பட்ட வாகனங்களை மின்சாரமாக மாற்றுவது போதுமான தீர்வாக இருக்காது என்றும் கூறுகின்றனர்.
டெல்லி அரசு, 30,000-க்கும் மேற்பட்ட சார்ஜிங் பாயிண்ட்களை அமைக்கவும், புதிய மின்சார வாகனங்களுக்கு சாலை மற்றும் வாகன வரிகளில் சலுகை அளிக்கவும் திட்டமிட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, டெல்லியின் காற்று மாசு பிரச்சினையை குறைக்கும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |