அடித்து நொறுக்கிய மெக்கர்க், ரிஷப் பண்ட்... டெல்லி அபாரம்
லக்னோ அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.
பதோனி 55 ஓட்டங்கள்
இன்று நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் -டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற லக்னோ அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.
இதையடுத்து அந்த அணியின் தொடக்க வீரர்களாக டி காக் மற்றும் ராகுல் களம் இறங்கினர். டி காக் 19 ஓட்டங்களில் வெளியேற, அடுத்து வந்த படிக்கல்(3), ஸ்டாய்னிஸ்(8), பூரன் (0) என அடுத்ததடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினர்.
மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராகுல் 39 ஓட்டங்களில் அவுட் ஆனார். இதனையடுத்து தீபக் ஹூடா ஆயுஷ் பதோனியுடன் ஜோடி சேர்ந்தார். இதில் ஹூடா 10 ஓட்டங்கள் எடுத்திருந்த போது இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
க்ருனால் பாண்ட்யா 3 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ஓட்டங்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக பதோனி 55 ஓட்டங்கள் சேர்த்தார்.
மெக்கர்க் அரைசதமடித்து அசத்தல்
இதனையடுத்து 168 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி களமிறங்கியது. தொடக்க வீரரான டேவிட் வார்னர் 8 ஓட்டங்களுக்கு தாகூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த ஜேக் ப்ரேசர்-மெக்கர்க் அதிரடி காட்டினார். பிரித்வி ஷா , மெக்கர்க் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அணியின் ஸ்கோர் 63 ஓட்டங்களாக இருந்த போது ஷா 22 பந்துகளில் 32 ஓட்டங்கள் சேர்த்து வெளியேறினார்.
பின்னர் வந்த ரிஷப் பண்ட் மெக்கர்க்குடன் இணைந்து அதிரடி காட்டினார். இருவரும் இணைந்து லக்னோ அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். சிறப்பாக விளையாடிய மெக்கர்க் அரைசதமடித்து அசத்தினார்.
இறுதியில் 18.1 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு டெல்லி 170 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மெக்கர்க் 55 ஓட்டங்களும் . பண்ட் 41 ஓட்டங்களும் எடுத்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |