டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: வெளியான முதல் சிசிடிவி ஆதாரம்!
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
டெல்லியை உலுக்கிய சம்பவம்
இந்திய தலைநகர் டெல்லியில் நேற்று (நவம்பர் 10) மாலை 6.52 மணியளவில், செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே, சுபாஷ் மார்க் சிக்னலில் ஒரு ஹூண்டாய் i20 கார் திடீரென வெடித்து சிதறியது. இதில் கிட்டத்தட்ட 09 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் படுகாயமடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார் வெடிப்பு சம்பவத்தின் போது அருகில் நின்றிருந்த வாகனங்களும் தீப்பிடித்து எரிந்ததுடன், வெடிப்பு சத்தம் ITO வரை கேட்கப்பட்டுள்ளது.
#WATCH | Delhi 10/11 Blast: Latest CCTV footage captures the moment of blast#DelhiBlast pic.twitter.com/MjC9fzjqR1
— NDTV (@ndtv) November 12, 2025
இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி காவல்துறையினர் உபா(UAPA) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெடிப்பு சம்பவத்தின் போது காரில் 2 பேர் வரை இருந்ததாக கூறப்படும் நிலையில், காரை ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் நபர் பரிதாபத்தில் கைது செய்யப்பட்ட மர்ம குழுவை சேர்ந்த மருத்துவர் உமர் முகமது என கூறப்படுகிறது.
சிசிடிவி காட்சிகள்

இந்நிலையில் டெல்லியில் கார் வெடிப்பு சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்கு பிறகு, நெரிசல் மிகுந்த போக்குவரத்துக்கு மத்தியில் வெள்ளை நிற ஹூண்டாய் i20 கார் திடீரென வெடித்து சிதறும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |