டெல்லி கார் குண்டு வெடிப்பு: வேகமெடுக்கும் NIA விசாரணை: காஷ்மீரை சேர்ந்த நபர் ஒருவர் கைது
டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் காஷ்மீரை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.
டெல்லி கார் குண்டு வெடிப்பு
இந்திய தலைநகர் டெல்லியில் நேற்று (நவம்பர் 10) மாலை 6.52 மணியளவில், செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே, சுபாஷ் மார்க் சிக்னலில் ஒரு ஹூண்டாய் i20 கார் திடீரென வெடித்து சிதறியது. இதில் கிட்டத்தட்ட 09 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் படுகாயமடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடிப்பு சம்பவத்தின் போது காரில் 2 பேர் வரை இருந்ததாக கூறப்படும் நிலையில், காரை ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் நபர் பரிதாபத்தில் கைது செய்யப்பட்ட மர்ம குழுவை சேர்ந்த மருத்துவர் உமர் முகமது என்பது டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

காஷ்மீரை சேர்ந்த நபர் கைது
இந்நிலையில் டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் காஷ்மீரை சேர்ந்த அமீர் ரஷீத் அலி என்பவர் தேசிய புலனாய்வு முகமை(NIA) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை வெளியான அறிக்கையின் தகவல் படி, அமீர் ரஷீத் அலி டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், நவம்பர் 10ம் திகதி டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட கார் அமீர் ரஷீத் அலியின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று NIA தெரிவித்துள்ளது.
அத்துடன், குண்டுவெடிப்பிற்காக பயன்படுத்தப்பட்ட காரை வெடிகுண்டாக நிரப்பிய காராக மாற்றி வழங்குவதற்காகவே அவர் டெல்லிக்கு வந்ததாகவும் NIA தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |