இரத்தம் சொட்ட சொட்ட நடுரோட்டில் வாலிபரை கொடூரமாக கொலை செய்த காதலி குடும்பம்!
டெல்லியில் மகளை காதலித்த காதலனை தந்தை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடுரோட்டில் வாலிபர் கொடூர கொலை
டெல்லியைச் சேர்ந்தவர் சல்மான் (25). இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் பெண் வீட்டாருக்கு தெரியவந்து இருவருக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். ஆனால், இவர்கள் இருவரும் தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று மாலை டெல்லி, ஜாஃப்ராபாத்தின் சவுகான் பாங்கரில் உள்ள திரையரங்கிற்கு அருகே சல்மான் தன் நண்பர்களோடு பைக்கில் வந்துக்கொண்டிருந்தார்.
அப்போது, காதலியின் தந்தை மன்சூர், சகோதர் மோஷின் மற்றும் தம்பி ஆகியோர் சல்மானை வழிமறித்தனர். உடனே, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சல்மானை கத்தியால் சரமாரியாக குத்தினர். இதைப் பார்த்ததும் சல்மான் கூட வந்த நண்பர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
ரத்தம் சொட்ட, சொட்ட நடுரோட்டில் சரிந்து கீழே விழுந்த சல்மான் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
பொலிசார் தேடுதல்
இது குறித்து பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் சல்மான் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பொலிசார் கொலையில் ஈடுபட்ட 3 பேரை தேடி வருகின்றனர். தற்போது, இச்சம்பவம் தொடர்பான பதற வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |