10,000 முதலீட்டில் சகோதரர் இருவரால் உருவான நிறுவனம்... தற்போது 2,800 கோடி வருவாய்: இவர்கள் சொத்து மதிப்பு
டெல்லியை சேர்ந்த துவா சகோதரர்கள் இருவர் வெறும் 10,000 ரூபாய் முதலீட்டில் உருவாக்கிய நிறுவனம் தற்போது ஆண்டுக்கு 2,800 கோடி வருவாய் ஈட்டுவதுடன், இவர்களின் மொத்த சொத்து மதிப்பும் வாயைப்பிளக்க வைத்துள்ளது.
துவா சகோதரர்கள்
டெல்லியை சேர்ந்த ரமேஷ் குமார் துவா மற்றும் முகந்த் லால் துவா சகோதரர்கள் 1976ல் Relaxo என்ற நிறுவனத்தை நிறுவியுள்ளனர். வெறும் 10,000 ரூபாய் முதலீட்டில் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் மிக விரைவிலேயே இந்திய காலணி துறையில் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட பிராண்டுகளில் ஒன்றாக மாறியது.
இவர்களின் ஹவாய் சப்பல் அணிந்துகொள்ளாத இந்தியர்களே இல்லை என்ற நிலை உருவானது. துவக்க காலகட்டத்தில் கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. பெரும்பாலும் கார்ப்பரேட் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் அரசாங்க விதிமுறைகள் தான் இவர்களை நெருக்கடிக்கு தள்ளியுள்ளது.
ஆனால் துவா சகோதரர்கள் தங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளை வாய்ப்பாகவும் சவாலாகவும் மாற்றியுள்ளனர். 1995ல் சுமார் 7.5 கோடி செலவிட்டு நாளுக்கு 50,000 ஜோடி காலணிகளை தயாரிக்கும் ஆலை ஒன்றை நிறுவியுள்ளனர்.
வருவாய் 2801.34 கோடி
அதன் பின்னர் அரசாங்கம் முன்னெடுத்த பொருளாதார சீர்திருத்தங்களை தங்களுக்கான வாய்ப்பாக பயன்படுத்த முடிவு செய்தனர். இவர்களின் Bahamas, Sparx, Flite, மற்றும் Schoolmate ஆகிய நான்கு பிராண்டுகளும் பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றது.
மட்டுமின்றி சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் நிலைக்கும் உயர்ந்தனர். இவர்களின் மொத்த வருவாயில் 5 சதவீதம் அளவுக்கு ஏற்றுமதியில் இருந்து ஈட்டியுள்ளனர்.
Relaxo நிறுவனம் 2022 மற்றும் 2023 நிதி ஆண்டில் 4.6 சதவீதம் வருவாய் அதிகரித்து, 2801.34 கோடி என பதிவு செய்துள்ளது. மேலும் 2023ல் ரமேஷ் குமார் துவா என்பவரின் சொத்து மதிப்பு 1 பில்லியன் டொலர் என கூறப்படுகிறது. துவா சகோதரர்கள் இருவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 19,000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |