வாணவேடிக்கை காட்டிய வீராங்கனைகள்! மகளிர் ஐபிஎல்லில் 223 ஓட்டங்கள் குவித்த அணி
மகளிர் ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக டெல்லி அணி 223 ஓட்டங்கள் குவித்துள்ளது.
லென்னிங்-ஷஃபாலி ருத்ர தாண்டவ ஆட்டம்
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிடல் அணியின் தொடக்க வீராங்கனைகள் மெக் லென்னிங், ஷஃபாலி வெர்மா இருவரும் ருத்ர தாண்டவம் ஆடினர்.
@DelhiCapitals(Twitter)
இவர்களது கூட்டணி 162 ஓட்டங்கள் குவித்தது. லென்னிங் 43 பந்துகளில் 72 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.
@DelhiCapitals(Twitter)
223 ஓட்டங்கள் குவிப்பு
அவரைத் தொடர்ந்து ஷஃபாலி 45 பந்துகளில் 4 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 84 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் களமிறங்கிய மரிசன்னே கப் அதிரடியாக 39 (17) ஓட்டங்களும், ஜெமிமா 22 (15) ஓட்டங்களும் விளாச, டெல்லி அணி 2 விக்கெட் இழப்புக்கு 223 ஓட்டங்கள் குவித்தது.
@DelhiCapitals(Twitter)
@DelhiCapitals(Twitter)