சொந்த மண்ணில் வீழ்ந்த RCB! கே.எல் ராகுல் அதிரடியில் டெல்லி கேபிடல்ஸ் அபார வெற்றி!
பெங்களூருவை சொந்த மண்ணில் வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது.
டெல்லி கேபிடல்ஸ் vs ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு
நடப்பு ஐபிஎல் 2025 தொடரின் 24-வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.
இந்த பரபரப்பான ஆட்டத்தில், டெல்லி கேபிடல்ஸ் (Delhi Capitals) அணி, பலம் வாய்ந்த ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bangalore) அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
பெங்களூரு இன்னிங்ஸ்
பெங்களூரு அணியின் இன்னிங்ஸை நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் பிலிப் சால்ட் ஆகியோர் தொடங்கினர்.
சால்ட் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி 17 பந்துகளில் 37 ஓட்டங்கள் குவித்தார்.
இதனால் பெங்களூரு அணி முதல் 4 ஓவர்களில் 62 ஓட்டங்கள் குவித்தது.
ஆனால், இந்த சிறப்பான தொடக்கத்தை அந்த அணி தக்கவைக்க தவறியதோடு அடுத்தடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் , விராட் கோலி, லிவிங்ஸ்டன் ஜிதேஷ் சர்மா, ரஜத் பட்டிதார் மற்றும் க்ருணல் பாண்டியா ஆகியோர் சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்தனர்.
இதன்மூலம், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 163 ஓட்டங்கள் எடுத்தது.
டெல்லி அசத்தல் வெற்றி
164 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ஆரம்பம் அதிர்ச்சியாக அமைந்தது.
அணியின் முன்னணி வீரர்களான டு பிளெஸ்ஸிஸ், ஜேக் பிரேசர், அபிஷேக் பொரெல், ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.
ஆனால், அணியின் நம்பிக்கை நட்சத்திரமான கே.எல்.ராகுல் இறுதி வரை நிலைத்து நின்று அபாரமாக ஆடி 93 ஓட்டங்கள் குவித்தார்.
அவருக்கு உறுதுணையாக அதிரடி வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 38 ஓட்டங்கள் குவித்தார்.
இறுதியில், டெல்லி கேபிடல்ஸ் அணி 17.5 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |