சாய் சுதர்ஷன், மில்லர் அபாரம் : டெல்லி கேப்பிடல்ஸ் அணியை நொறுக்கிய குஜராத்

Hardik Pandya Delhi Capitals Gujarat Titans IPL 2023
By Arbin Apr 04, 2023 06:54 PM GMT
Report

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றிபெற்றது.

ஐபிஎல் தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - குஜராத் ஜெய்ண்ட்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

சாய் சுதர்ஷன், மில்லர் அபாரம் : டெல்லி கேப்பிடல்ஸ் அணியை நொறுக்கிய குஜராத் | Delhi Capitals Gujarat Titans Won Match

இதையடுத்து டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் களம் இறங்கினர். பிரித்வி ஷா(7), அடுத்து வந்த மிட்செல் மார்ஷ்(4) ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகினர்.

இருவரது விக்கெட்டுகளையும் முகமது ஷமி வீழ்த்தினார். இதையடுத்து வார்னருடன், சர்ப்ராஸ் கான் ஜோடி சேர்ந்தார். இதில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வார்னர் 37 ஓட்டங்களில் அவுட் ஆனார்.

இதையடுத்து களம் இறங்கிய ரீலி ரோசவ் முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அபிஷேக் போரல் சர்ப்ராஸ் கானுடன் ஜோடி சேர்ந்தார். இதில் அபிஷேக் போரெல் 20 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

சாய் சுதர்ஷன், மில்லர் அபாரம் : டெல்லி கேப்பிடல்ஸ் அணியை நொறுக்கிய குஜராத் | Delhi Capitals Gujarat Titans Won Match

இதையடுத்து அக்சர் படேல் களம் இறங்கினார். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சர்ப்ராஸ் கான் 30 ஓட்டங்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ஹக்கிம் கான் 8 ஓட்டங்களும், அதிரடியாக விளையாடிய அக்சர் படேல் 36 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்கள் எடுத்தது. குஜராத் அணியின் சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி மற்றும் ரஷித் கான் தலா 3 விக்கெட்டுகளும், ஜோசப் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

163 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணியின் சார்பில் விருதிமான் சஹா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இந்த ஜோடியில் சஹா 14 ஓட்டங்களில் வெளியேற, அவரைத்தொடர்ந்து சுப்மன் கில் 14 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யாவும் 5 ஓட்டங்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அடுத்ததாக சாய் சுதர்சனுடன், விஜய் சங்கர் ஜோடி சேர்ந்தார். இருவரும் சேர்ந்து அணியின் ரன் ரேட்டை நிதானமாக உயர்த்தினர்.

சாய் சுதர்ஷன், மில்லர் அபாரம் : டெல்லி கேப்பிடல்ஸ் அணியை நொறுக்கிய குஜராத் | Delhi Capitals Gujarat Titans Won Match

இந்த சூழலில் விஜய் சங்கர் 29 (23) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து சாய் சுதர்சனுடன் டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் சாய் சுதர்ஷன் 44 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து இந்த ஜோடி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.

முடிவில் சாய் சுதர்சன் 62 (48) ஓட்டங்களும், டேவிட் மில்லர் 31 (16) ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் குஜராத் அணி 18.1 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து

163 ஓட்டங்கள் எடுத்தது. டெல்லி அணியின் சார்பில் அதிகபட்சமாக நாட்ஜ் 2 விக்கெட்டுகளும், கலீல் அகமது மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றிபெற்றது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US