போராடிய பஞ்சாப் கிங்ஸ்: டெல்லி கேப்பிடல்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
ஐபிஎல் தொடரின் 66 வது லீக் போட்டி ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெற்றது.
இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 206 ஓட்டங்கள் என்ற வலுவான இலக்கை நிர்ணயித்தது.
ஷ்ரேயஸ் ஐயர் அரைசதம் கடந்து 53 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் களமிறங்கிய மார்கஸ் ஸ்டோய்னிஸ், 16 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்கள் குவித்து பஞ்சாப் அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினார்.
டெல்லி கேபிடல்ஸ் த்ரில் வெற்றி
207 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி, தொடக்கம் முதலே அதிரடி காட்டியது.
கே.எல். ராகுல் 35 ஓட்டங்களும், டூ பிளசிஸ் 23 ஓட்டங்களும் எடுத்தனர்.
கருண் நாயர் 27 பந்துகளில் 44 ஓட்டங்கள் எடுத்து அணிக்கு உத்வேகம் அளித்தார்.
Trust in 'safe as a house' Stubbs 😎💙 pic.twitter.com/RmB3SK7uD7
— Delhi Capitals (@DelhiCapitals) May 24, 2025
மறுப்புறம், சமீர் ரிஸ்வி ஆட்டத்தின் போக்கை மாற்றினார், அவர் வெறும் 22 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
இறுதியில், டெல்லி கேபிடல்ஸ் அணி 19.3 ஓவர்களில் 208 ஓட்டங்கள் எடுத்து சிறப்பான வெற்றியைப் பதிவு செய்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |