கதிகலங்கிய மும்பை இந்தியன்ஸ்..258 ஓட்டங்கள் இமாலய இலக்கு நிர்ணயித்த DC
ஐபிஎல் 43வது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 258 ஓட்டங்களை வெற்றி இலக்காக மும்பை இந்தியன்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
ஜேக் ஃபிரேசர் 84
இன்றையப் போட்டியில் முதலில் களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியில், தொடக்க வீரர் ஜேக் ஃபிரேசர் ருத்ரதாண்டவம் ஆடி 84 (27) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து அபிஷேக் போரெல் 27 பந்துகளில் 36 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் வந்த ஷாய் ஹோப் சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
மறுமுனையில் ரிஷாப் பண்டும் அதிரடியில் மிரட்டினார். இதன்மூலம் டெல்லி அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
Swoosh ?
— IndianPremierLeague (@IPL) April 27, 2024
2️⃣0️⃣0️⃣ up for @DelhiCapitals with skipper Rishabh Pant in that kind of form ?
Watch the match LIVE on @JioCinema and @StarSportsIndia ??#TATAIPL | #DCvMI pic.twitter.com/zg5zmEzYkL
ஸ்டப்ஸ் சரவெடி
ஹோப் 17 பந்துகளில் 41 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அதன்பிறகு வந்த ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் சரவெடியாய் வெடித்தார்.
இறுதியில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்புக்கு 257 ஓட்டங்கள் குவித்தது. ரிஷாப் பண்ட் 29 (19) ஓட்டங்களும், ஸ்டப்ஸ் 48 (25) ஓட்டங்களும் விளாசினர்.
மும்பை அணியின் தரப்பில் லுக் வுட், பும்ரா, நபி மற்றும் சாவ்லா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
?????? ?? ???? ?
— IndianPremierLeague (@IPL) April 27, 2024
Tristan Stubbs displaying his range of shots with a 2️⃣6️⃣-run over ?
Watch the match LIVE on @JioCinema and @StarSportsIndia ??#TATAIPL | #DCvMI | @DelhiCapitals pic.twitter.com/Hfb9aEYchf
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |