UP வாரியர்ஸ் அணியை பந்தாடிய மெக் லானிங்: 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அபார வெற்றி
செவ்வாய் கிழமை நடைபெற்ற மகளிர் இந்தியன் பிரீமியர் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் UP வாரியர்ஸை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
முதல் பேட்டிங்
முதல் பேட்டிங்கில் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 211 ஓட்டங்கள் குவித்து இருந்தது.
அணியில் அதிகபட்சமாக கேப்டன் மெக் லானிங் 42 பந்துகளில் 70 ஓட்டங்கள் குவித்து இருந்தார், மேலும் ஜெஸ் ஜோனாசென் 42 ஓட்டங்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 34 ஓட்டங்களும் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றதால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி சிறப்பான ஓட்டத்தை எதிரணிக்கு இலக்காக நிர்ணயிக்க முடிந்தது.
We are still in ? of this catch by Radha Yadav ?
— GMR SPORTS (@sports_gmr) March 7, 2023
How many times did you watch this ? catch on loop? ? #DCvUPW #CapitalUniverse #TATAWPL #GMRSports #GMRGroup | @DelhiCapitals | @Radhay_21 pic.twitter.com/to83hojN65
42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்த UP வாரியர்ஸ்
இதையடுத்து 212 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய UP வாரியர்ஸ் அணியால், 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 169 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதனால் டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் UP வாரியர்ஸ் தோல்வியை தழுவியது. UP வாரியர்ஸ் அணியில் அதிகபட்சமாக தஹ்லியா மெக்ராத் 50 பந்துகளில் 90 ஓட்டங்கள் குவித்தார்.
?| Post-match pleasantries following a grueling encounter ?
— Delhi Capitals (@DelhiCapitals) March 7, 2023
Here's to entertaining the #TATAWPL crowd, @UPWarriorz ?#YehHaiNayiDilli #CapitalsUniverse #DCvUPW pic.twitter.com/rSG0e6D3ve
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஜெஸ் ஜோனாசென், பேட்டிங்கில் 43 ஓட்டங்கள் குவித்ததுடன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவிகரமாக இருந்தார்.